UPDATED : மே 11, 2021 12:00 AM
ADDED : மே 11, 2021 07:58 PM
அ நிறம் | அளவு
திருநெல்வேலி:
சென்னை அண்ணா பல்கலை பேராசிரியர் கொரோனாவிற்கு பலியானார்.
சென்னை அண்ணா பல்கலையில் உற்பத்தி தொழில்நுட்ப துறையில் பேராசிரியராக பணியாற்றியவர் சக்திநாதன், 44. திருநெல்வேலி, பெருமாள்புரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். சில ஆண்டுகளாக, திருநெல்வேலி அண்ணா பல்கலையில் டீனாக பணியாற்றிய போது, தாமிரபரணி சூழல் பாதுகாப்பு, குளங்கள், நீர்நிலைகள் துார் வாருதல் உள்ளிட்ட சூழல் மேம்பாட்டு பணிகளில், சிறப்பாக பணியாற்றினார்.
சென்னையில் இருந்து, சொந்த ஊருக்கு வந்த அவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டார். திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நேற்று இறந்தார். அவருக்கு மனைவி, இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
