தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அண்ணா பல்கலை வளாகத்திலும் கொரோனா சிகிச்சை மையம்

அண்ணா பல்கலை வளாகத்திலும் கொரோனா சிகிச்சை மையம்

அண்ணா பல்கலை வளாகத்திலும் கொரோனா சிகிச்சை மையம்


UPDATED : மே 11, 2021 12:00 AM

ADDED : மே 11, 2021 07:59 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 11, 2021 12:00 AM ADDED : மே 11, 2021 07:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வடவள்ளி:
நவாவூரில் உள்ள அண்ணா பல்கலை வளாகத்தில், கொரோனா சிகிச்சை மையம் துவங்கப்பட்டுள்ளது.
கோவையில், நாள்தோறும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, 2,000ஐ கடந்து வருகிறது. லேசான தொற்று பாதிப்பு உள்ளவர்களுக்கு, கோவை பாரதியார் பல்கலை, கொடிசியா, மத்தம்பாளையம் உள்ளிட்ட இடங்களில், கொரோனா கேர் சென்டர்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், மாவட்ட நிர்வாகம், ராஜஸ்தானி சமூகம், யு.ஐ.டி., கல்வி அறக்கட்டளை உதவியுடன், நவாவூரிலுள்ள அண்ணா பல்கலை வளாகத்தில் உள்ள மகளிர் விடுதியில், முதற்கட்டமாக, 100 படுக்கைகளுடன் கூடிய சிகிச்சை மையம் துவங்கப்பட்டுள்ளது.
ஓரிரு நாட்களில், ஆண்கள் விடுதியிலும், 100 படுக்கைகளுடன் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. இன்று முதல், அண்ணா பல்கலையில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில், நோயாளிகள் அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு தேவையான மருந்து, உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நோயாளிகளை கண்காணிக்க, சிறப்பு மருத்துவக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us