குழந்தைகளை பாதுகாக்கும் திட்டம்: கமல் வலியுறுத்தல்
குழந்தைகளை பாதுகாக்கும் திட்டம்: கமல் வலியுறுத்தல்
UPDATED : மே 21, 2021 12:00 AM
ADDED : மே 21, 2021 08:35 PM
சென்னை:
&'பெற்றோரை இழக்கும் குழந்தைகளை பாதுகாக்க, உறவினர் பராமரிப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்&' என, மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் கோரியுள்ளார்.
அவரது அறிக்கை:
கொரோனா தொற்றால் நிறைய குழந்தைகள், பெற்றோரை இழந்து தவிக்கின்றன. அவர்களின் வாழ்க்கை கேள்விக் குறியாகியுள்ளது. இவ்வாறு பெற்றோரை இழக்கும் குழந்தைகளுக்காக, அண்டை மாநிலங்கள் பல திட்டங்களை அறிவித்துள்ளன. இத்தகைய குழந்தைகளை, பெற்றோரின் நெருங்கிய நட்பு வட்டாரமே பராமரிப்பது சிறந்தது என, நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
பெற்றோரை இழக்கும் குழந்தைகள், அறிமுகம் இல்லாதவர்களுடன் சென்றால், மனரீதியாக பாதிப்படைய வாய்ப்புள்ளது. எனவே, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் கீழ் இயங்கும் அமைப்புகள், சிறார் நீதி சட்டம் அடிப்படையில், பெற்றோரை இழந்தவர்களை பராமரிக்க, &'உறவினர் பராமரிப்பு திட்டம்&' ஒன்றை, வளர்ப்பு மற்றும் பராமரிப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக செயல்படுத்த வேண்டும்.
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் குழந்தைகளும், பாதுகாப்பாக இருக்கிறார்களா என்பதை உறுதி செய்ய, கண்காணிப்பு குழு ஒன்றை அமைக்க வேண்டும். ஆதரவற்ற குழந்தைகளுக்கு, ஆரோக்கியமான சூழலை உருவாக்க, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கமல் கூறியுள்ளார்.
