தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பாரதிதாசன் கல்லுாரி சார்பில் சுற்றுச்சூழல் கருத்தரங்கு

பாரதிதாசன் கல்லுாரி சார்பில் சுற்றுச்சூழல் கருத்தரங்கு

பாரதிதாசன் கல்லுாரி சார்பில் சுற்றுச்சூழல் கருத்தரங்கு


UPDATED : ஜூன் 06, 2021 12:00 AM

ADDED : ஜூன் 06, 2021 08:37 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 06, 2021 12:00 AM ADDED : ஜூன் 06, 2021 08:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
பாரதிதாசன் மகளிர் கல்லுாரி பொருளியல் துறை சார்பில் சுற்றுச்சூழல் தொடர்பாக இணைய வழி கருத்தரங்கு நடந்தது.
உலக அளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், ஆண்டு தோறும் ஜூன் 5ம் தேதி, உலக சுற்றுச்சூழல் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரி, பொருளியல் துறை, உள்தர உறுதி அமைப்பு இணைந்து, &'சுற்றுச்சூழல் அமைப்பை மீட்டெடுத்தலில் நம் செயல்பாடுகள் போதுமானதா&' என்ற தலைப்பில், இணையவழியில் சர்வதேச கருத்தரங்கு நடந்தது.
கல்லுாரி முதல்வர் ராஜிசுகுமார் தலைமை தாங்கினார். பொருளாதார நிபுணர் டால்பேர்ட் முசேரி சிறப்புரையாற்றினார். கருத்தரங்கில், உலக நாடுகள், விஞ்ஞானிகள், விவசாயிகள், தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள், ஒவ்வொரு தனி மனிதரும், பூமியில் இயற்கையை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. முன்னதாக பொருளியல் துறை தலைவர் மெர்சிலின் மேரிகிறிஸ்டினா வரவேற்றார். கோரக் சாவ்லா நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us