தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பி.யு.சி., தேர்வு மார்க்; பெற்றோர் குழப்பம்

பி.யு.சி., தேர்வு மார்க்; பெற்றோர் குழப்பம்

பி.யு.சி., தேர்வு மார்க்; பெற்றோர் குழப்பம்


UPDATED : ஜூன் 08, 2021 12:00 AM

ADDED : ஜூன் 08, 2021 12:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 08, 2021 12:00 AM ADDED : ஜூன் 08, 2021 12:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு:
எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு மதிப்பெண் அடிப்படையில், இரண்டாம் ஆண்டு பி.யு.சி.,க்கு கிரேட் வழங்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளதால் பெற்றோர் குழப்பமடைந்துள்ளனர்.
கர்நாடகாவில், இரண்டாம் ஆண்டு பி.யு.சி., மாணவர்களுக்கு தேர்வின்றி &'ஆல் பாஸ்&' செய்யப்படுவதாக, தொடக்க கல்வி துறை அமைச்சர் சுரேஷ்குமார் அறிவித்துள்ளார். கடந்தாண்டின், முதலாம் ஆண்டு பி.யு.சி., தேர்வு அடிப்படையில், &'ஏ பிளஸ், ஏ, பி பிளஸ், பி&' என கிரேட் அளவில் தேர்ச்சி பெற வைக்கப்படும் என்றும் கூறியிருந்தார். ஆனால், 2019 ல் நடந்த எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு மதிப்பெண் அடிப்படையில், இரண்டாம் ஆண்டு பி.யு.சி.,க்கு கிரேட் வழங்கும்படி கல்வி துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் சுரேஷ்குமார் நேற்று முன் தினம் உத்தரவிட்டுள்ளார்.
இதனால், பெற்றோரும், மாணவர்களும் குழப்பமடைந்துள்ளனர். பெற்றோர் கூறியதாவது:

பல மாணவர்கள் சி.பி.எஸ்.இ., பள்ளியிலிருந்து பி.யு.சி., படிப்புக்கு மாநில பள்ளிகளுக்கு வந்திருப்பர். அவர்களின் மதிப்பெண் எவ்வாறு கணக்கிடப்படும்.இது தவிர, பத்தாம் வகுப்பு பாடங்கள் குறைவு, பி.யு.சி.,வகுப்பின் பாடங்கள் வேறு; இவற்றை எந்த அடிப்படையில் கணக்கிட போகின்றனர் என்பது குழப்பமாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us