தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி கட்டணம் செலுத்துவதில் வழிகாட்டுதல் தேவை

பள்ளி கட்டணம் செலுத்துவதில் வழிகாட்டுதல் தேவை

பள்ளி கட்டணம் செலுத்துவதில் வழிகாட்டுதல் தேவை


UPDATED : ஜூன் 16, 2021 12:00 AM

ADDED : ஜூன் 16, 2021 03:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 16, 2021 12:00 AM ADDED : ஜூன் 16, 2021 03:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு:
புதிய கல்வியாண்டுக்கான பள்ளி கட்டணம் செலுத்துவதில் அரசு முறையான அறிவிப்பு வெளியிட வேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
ஜூலை முதல் 2021 - 22 கல்வியாண்டு துவங்குகிறது. புதிய கல்வியாண்டுக்கான கட்டணத் தொகை செலுத்துவதில் பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்தினரிடையே தொடர்ந்து சலசலப்பு ஏற்பட்டு வருகிறது.பள்ளி கட்டணம் செலுத்துவதில் பொதுவான சலுகை கிடையாது என பள்ளி நிர்வாகமும், சலுகை கட்டாயம் தேவை என பெற்றோரும் கூறி வருகின்றனர்.
கர்நாடக தனியார் பள்ளிகள் நிர்வாக சங்க செயலர் சசிகுமார் கூறியதாவது:

இம்முறை நுாறு சதவீதம் கட்டணத்தை பெற்றோர் செலுத்த வேண்டும். பெற்றோருக்கு உதவும் வகையில் கட்டணத் தொகையை ஒவ்வொரு கட்டமாக செலுத்துவதற்கு அனுமதி வழங்க திட்டமிட்டுள்ளோம்.
கொரோனாவால் வேலை இழந்த பெற்றோர், கட்டணம் செலுத்துவது தொடர்பாக அந்தந்த பள்ளியை அணுகி சலுகை பெறலாம். தவிர பொதுவான சலுகை கிடையாது. அரசிடமும் இதை தான் கோரிக்கையாக வலியுறுத்தி உள்ளோம்.கடந்த கல்வியாண்டுக்குரிய கட்டணத்தை பல பெற்றோர் இன்னும் செலுத்தாமல் உள்ளனர்.இதனால் பள்ளி நிர்வாகம், ஆசிரியர்களுக்கு சம்பளம் கூட வழங்க முடியாத நிலையில் உள்ளனர். இம்முறையும் இது போன்று நிகழ கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
பெற்றோர் கூறியதாவது:

கொரோனா ஊரடங்கால் பொருளாதார அளவில் பாதிக்கப்பட்டுள்ளோம். இந்நிலையில் முழு கட்டணத்தையும் செலுத்த சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
மாணவர்கள் பள்ளி சூழலை பயன்படுத்தவே இல்லை; அவர்கள் வீட்டிலிருந்து தான் பாடம் படிக்கின்றனர். இதனால் 70 சதவீதம் கட்டணம் மட்டுமே செலுத்த வேண்டும். இதற்கு முறையான வழிகாட்டுதலை அரசு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us