தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டி.சி., இல்லாத மாணவர்கள் தலைமையாசிரியர் குழப்பம்

டி.சி., இல்லாத மாணவர்கள் தலைமையாசிரியர் குழப்பம்

டி.சி., இல்லாத மாணவர்கள் தலைமையாசிரியர் குழப்பம்


UPDATED : ஜூன் 24, 2021 12:00 AM

ADDED : ஜூன் 24, 2021 08:17 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 24, 2021 12:00 AM ADDED : ஜூன் 24, 2021 08:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரையில் அரசு பள்ளிகளில் டி.சி., (மாற்றுச் சான்று) இல்லாத மாணவர்களை சேர்ப்பதில் தலைமையாசிரியர்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ஒன்று முதல் பிளஸ் 2 வரை மாணவர் சேர்க்கை நடத்த கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா தாக்கத்தால் தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்கள் பலர் கட்டணம் செலுத்தாமலும் முறையாக டி.சி., பெறாமலும் அரசு பள்ளிகளை தேடி செல்கின்றனர். அவர்களிடம் டி.சி., இல்லாததால் &'எமிஸில்&' பதிவேற்றம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பெயரளவில் மட்டுமே அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க முடிகிறது. மாணவர் எண்ணிக்கை குறித்த விவரம் தெரிவிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தலைமையாசிரியர்கள் கூறுகையில், &'கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி 14 வயது மாணவர்களிடம் &'டி.சி.,&' கேட்காமல் சேர்க்க அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளியில் சேர்ந்தவுடன் மாணவர் விவரத்தை &'எமிஸ்&'ல் பதிவு செய்ய கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதில் &'டி.சி.,&' விவரம் தெரிவிக்காவிட்டால் பதிவேற்றம் செய்ய முடியவில்லை. அரசு பள்ளிகளில் துவக்க மற்றும் நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு டி.சி., வழங்க கல்வித்துறை உத்தரவிட வேண்டும்,&' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us