பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் பிரித்து அனுப்பும் பணி தீவிரம்
பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் பிரித்து அனுப்பும் பணி தீவிரம்
UPDATED : ஜூன் 24, 2021 12:00 AM
ADDED : ஜூன் 24, 2021 08:18 AM
உடுமலை:
உடுமலையில், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், மாணவர்களுக்கு வழங்குவதற்கான பாடப்புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளன.
உடுமலை கல்வி மாவட்டத்தில், 38 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், 253 தொடக்க நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கை பதிவு நடந்து வருகிறது. ஆன்லைன் வகுப்புகள் துவக்கப்படவுள்ள நிலையில், இப்பள்ளி மாணவர்களுக்கு, 2021-22ம் கல்வி ஆண்டுக்கான பாடப்புத்தகங்கள் வழங்கப்படவும் உள்ளது.
மாணவர்களுக்கு வேண்டிய இலவச பாடப்புத்தகங்கள், அந்தந்த பள்ளிகளுக்கு பிரித்து அனுப்பப்பட்டு வருகின்றன. கல்வித்துறை அதிகாரிகள், இதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், &'பள்ளிகளில், மாணவர்களுக்கு வழங்க வேண்டிய பாடப்புத்தகங்கள், பள்ளிகளில் தயார் நிலையில் வைக்கப்படுகின்றன. அரசு உத்தரவு கிடைத்தவுடன் பள்ளிகளுக்கு, பெற்றோர்களுடன் மாணவர்கள் வரவழைக்கப்பட்டு, பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்&' என்றனர்.
