தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிரெஞ்ச் மாதிரி தேர்வு மாணவர்களுக்கு அழைப்பு

பிரெஞ்ச் மாதிரி தேர்வு மாணவர்களுக்கு அழைப்பு

பிரெஞ்ச் மாதிரி தேர்வு மாணவர்களுக்கு அழைப்பு


UPDATED : நவ 16, 2009 12:00 AM

ADDED : நவ 16, 2009 08:36 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 16, 2009 12:00 AM ADDED : நவ 16, 2009 08:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இத்தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர் கள், நவ., 27க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தமிழகத்தின் பல பள்ளிகளில் மாணவர்கள் இரண்டாவது மொழியாக பிரெஞ்ச் பாடத்தை தேர்வு செய்து படித்து வருகின்றனர். பொதுத் தேர்வுக்கு முன், பிற பாடங்களுக்கு மாதிரி தேர்வு நடத்தப் படுவது போல், பிரெஞ்ச் பாடத்துக்கு மாதிரி தேர்வுகள் நடத்தப்படுவதில்லை.

இதனால், பொது தேர்வை நேரடியாக சந்திக்கும் மாணவர்கள் திணறி விடுகின்றனர். பிரெஞ்ச் படிக்கும் மாணவர்களுக் கென மாதிரி தேர்வுகள் நடத்தி, கடந்த சில ஆண்டுகளாக திருப்பூர் நிப்ட்-டீ கல்லூரி மாணவர்களுக்கு உதவி வருகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு, டிச., 5ல் திருப்பூர் நிப்ட்-டீ கல்லூரியில் நடைபெறவுள்ளது.

அக்கல்லூரி முதல்வர் கோகர்நேசன் கூறியதாவது: நிப்ட்-டீ கல்லூரியின் ஆங்கிலம் மற்றும் அயல்நாட்டு மொழித் துறை சார்பில் பிளஸ் 2 மாணவர்களுக்கு மாநில அளவில் பிரெஞ்ச்  மாதிரி தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வுக்கான கேள்வித்தாள்கள் அரசு பொதுத் தேர்வு விதிகளின்படி சிறந்த பிரெஞ்ச் ஆசிரியர் குழுவால் தயாரிக்கப்படுகிறது.

மதிப்பீடு செய்யப்பட்ட வினாத்தாள்கள் அந்தந்த மாணவர்களுக்கு திரும்ப தரப்படுகிறது. இதனால், மாதிரி தேர்வில் செய்யும் தவறுகளை, பொதுத் தேர்வில் திருத்திக் கொண்டு அதிக மதிப்பெண் அள்ள மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. தேர்வில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். முதல் மூன்று இடங்களை பெறும் மாணவர்களுக்கு பரிசுகளும் உண்டு.

இது தொடர்பாக பள்ளிகளுக்கு தனித்தனியாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை நாமக்கல், ஈரோடு, கரூர், நீலகிரி, திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். இலவச போக்குவரத்து வசதி உண்டு. தேர்வில் பங்கேற்க விரும்பும் பள்ளிகள், நவ., 27க்குள் அயல்நாட்டு மொழி விரிவுரையாளர் சகாய அருள் என்பவரை 94431-82755 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, கோகர்நேசன் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us