UPDATED : டிச 04, 2009 12:00 AM
ADDED : டிச 04, 2009 02:32 PM
அ நிறம் | அளவு
இந்திய ராணுவத்தில் சேர பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டியதில்லை. பள்ளிக் கல்வி படித்திருந்தால் போதுமானது. அப்படி கல்வி கற்றவர்கள் ஏராளமானவர்கள் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றி வருகின்றனர்;
ஒவ்வொரு ஆண்டும், 15 ஆண்டு ராணுவ சேவை முடித்து 50 ஆயிரம் பேர் வெளியே வருகின்றனர்.ஓய்வு பெற்று வரும் அவர்கள் ஏதாவது ஒரு பணியில் சேர்ந்து வாழ்வாதாரத்துக்கு வழி தேடிக் கொள்ளவேண்டும். இப்படி அவர்கள் அரசுத்துறை, தனியார் துறையில் வேலை தேடும் போது அடிப்படை கல்வியாக பட்டப் படிப்பு படித்து இருக்க வேண்டும் என்று தகுதிகள் நிர்ணயிக்கப்படுகின்றன.
இதனால், பல ராணுவ வீரர்கள் வேலை கிடைக்காமல் கஷ்டத்தில் இருந்து வருகின்றனர். போட்டி நிறைந்த உலகில், அடிப்படை கல்வி இல்லாமல் எவராலும் வேலை பெறுவது மிகவும் கடினம். அந்த வகையில் அவர்கள் பட்டப் படிப்பு படித்திருத்தல் அவசியம்.
இதை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வாழ்வாதாரத்தை உருவாக்கும் நோக்கத்தோடு, மத்திய ராணுவ அமைச்சகம், இந்திரா காந்தி திறந்த நிலை பல்கலைக்கழகத்தோடு இணைந்து, ஜியான் தீப் என்ற திட்டத்தை துவக்கியுள்ளது.
இதன் மூலம் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு பட்டப்படிப்பு அளிக்கிறது. பி.ஏ.,பி.பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., படிப்புகளை அறிமுகப் படுத்தி உள்ளது.இதற்காக பெங்களூரில் ஐந்து கல்வி மையங்களிலும், பெல்காமில் ஒரு மையத்திலும் இந்த கல்விக்கு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி ஓய்வு பெறும் வீரர்கள் இங்கு சேர்ந்து தங்களுக்கு பிடித்த பாடத்தை தேர்ந்தெடுத்து படித்துக் கொள்ளலாம்.
