தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எஸ்.ஆர்.எம்., பல்கலை மாணவர்கள் சாதனை பயணம்

எஸ்.ஆர்.எம்., பல்கலை மாணவர்கள் சாதனை பயணம்

எஸ்.ஆர்.எம்., பல்கலை மாணவர்கள் சாதனை பயணம்


UPDATED : டிச 09, 2009 12:00 AM

ADDED : டிச 09, 2009 01:45 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 09, 2009 12:00 AM ADDED : டிச 09, 2009 01:45 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இதுகுறித்து எஸ்.ஆர்.எம்., பல்கலைக் கழக வேந்தர் பச்சமுத்து, நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலைக் கழகத்தில் பி.டெக்., ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் தருண்குமார் திரிபாதி(20) பிரதீக் தரோலியா(21). இவர்கள் இருவரும் தருண்குமாரின் சகோதரர் ஆசிஷ் திரிபாதி(23)யுடன் இணைந்து தங்க நாற்கர சாலையை காரிலேயே சுற்றி வர திட்டமிட்டுள்ளனர். இந்த சாதனை பயணத்தை அவர்கள் நவம்பர் 9ம் தேதி அதிகாலை 4 மணியளவில் மேற்கொள்கின்றனர்.


லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெறவும், நாட்டு மக்களிடம் மனிதத் தன்மை தழைத்தோங்க வலியுறுத்தியும், மனிதனாக இது சமயம் என்ற தலைப்பில் இவர்களின் கார் பயணம் அமைகிறது. காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து பயணம் துவங்குகிறது.


சென்னையில் துவங்கி கோல்கட்டா வழியாக டில்லி சென்று மும்பை வழியாக சென்னை திரும்பும் இந்த சாதனை பயணத்தின் மொத்த தூரம் 5,949 கிலோ மீட்டர். இந்த தூரத்தை 72லிருந்து 75 மணி நேரத்திற்குள்ளாக கடக்க திட்டமிட்டுள்ளனர். இவ்வாறு பச்சமுத்து கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us