தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உருது மொழியில் கீதை : முஸ்லிம் பேராசிரியர் சாதனை

உருது மொழியில் கீதை : முஸ்லிம் பேராசிரியர் சாதனை

உருது மொழியில் கீதை : முஸ்லிம் பேராசிரியர் சாதனை


UPDATED : டிச 09, 2009 12:00 AM

ADDED : டிச 09, 2009 03:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 09, 2009 12:00 AM ADDED : டிச 09, 2009 03:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உ.பி., மாநிலத்தை சேர்ந்தவர் அன்வர் ஜலால்புரி; அம்பேத்கர் நகர் கல்லூரியில் ஆங்கில பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இந்து - முஸ்லிம் இடையே நல்லிணக்கத்தை வலியுறுத்தி, பகவத் கீதையில் உள்ள பல நல்ல விஷயங்களை முஸ்லிம் மக்களும் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தில், அதை உருது மொழியில் அந்த புத்தகத்தை மொழிபெயர்த்து உள்ளார். இவர் தனது உருது ஆராய்ச்சியில், பகவத் கீதை மொழிபெயர்ப்பை ஒரு பாடமாக எடுத்து ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார். காலையில் மசூதிக்கு தொழுகைக்கு சென்றால், மாலையில் வீட்டில் கீதையை சொல்லித்தர சிறப்பு வகுப்புகளை நடத்தி வருகிறார்.


கீதை மொழிபெயர்ப்பு அனுபவம் பற்றி இவர் கூறுகையில், கீதையை மொழிபெயர்த்தது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்; மொழி பெயர்ப்புகள் உரைநடையில் அல்லாது கவிதை வடிவில் மக்கள் இசைத்து பாடக்கூடிய வகையில் செய்யப்பட்டுள்ளன. கீதை, உபநிஷதம்,குரான் ஆகிய புத்தகங்கள் எந்த விதத்திலும் மனித மரபுக்கு குறைந்தது கிடையாது. அவைகளை எவ்வளவு பாடுபட்டாவது மக்கள் போற்றி பாதுகாக்க வேண்டும் என்கிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us