உயிரியல் படிப்புகளுக்கு முக்கியத்துவம்: தலைமைச் செயலர் பேச்சு
உயிரியல் படிப்புகளுக்கு முக்கியத்துவம்: தலைமைச் செயலர் பேச்சு
UPDATED : டிச 09, 2009 12:00 AM
ADDED : டிச 09, 2009 03:02 PM
சென்னை மாநிலக் கல்லூரி, இந்திய கூட்டமைப்பு (சென்னை பிரிவு)மற்றும் இந்திய உயிரியல் சங்கம் ஆகியன இணைந்து, தேசிய அளவில் புதிய மற்றும் இணையும் உயிரியல் பிரிவுகள் குறித்த மூன்று நாள் கருத்தரங்கை துவக்கின.
புதிய அறிவியல் சம்பந்தப்பட்ட உயிரியல் பிரிவுகளான புற்று நோயியல், வான் வைரஸியல், நோய் எதிர்ப்பியல், உயிரி பரவல், ஸ்டம்செல் உயிரியல் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட அறிவியல் பிரிவுகளில் சொற்பொழிவுகளும், நூற்றுக் கும் மேற்பட்ட அறிவியல் ஆய்வு கட்டுரைகளும், கருத்தரங்கில் இடம் பெறுகின்றன. 500க்கும் மேற்பட்ட அறிவியல் நிபுணர்கள் பங்கேற்று, சிறப்பு ஆலோசனைகளும் வழங்க உள்ளனர்.
தலைமைச் செயலர் ஸ்ரீபதி, கருத்தரங்கை துவக்கி வைத்து பேசியதாவது: கடந்த 10 முதல் 15 வருடங்களாக, மாணவர்கள் உயிரியல் தொடர்பான படிப்புகளை தேர்ந்தெடுக்க ஆர்வம் காட்டுவதில்லை. பொறியியல், மருத்துவம் போன்ற படிப்புகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை, உயிரியல் சார்ந்த படிப்புகளுக்கும் மாணவர்கள் வழங்க வேண்டும். உயிரியல் சார்ந்த படிப்புகள் படித்தால், வேலை கிடைப்பது கடினம் என்று பலர் கருதுகின்றனர். ஆனால், அறிவியல் துறையில் அதிகமான வேலைகள், தகுதியான ஆட்கள் கிடைக்காமல் பூர்த்தியாகாமல் உள்ளன. இவ்வாறு ஸ்ரீபதி பேசினார்.
