தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நானோ தொழில் நுட்பத்தில் அதிக வேலைவாய்ப்பு

நானோ தொழில் நுட்பத்தில் அதிக வேலைவாய்ப்பு

நானோ தொழில் நுட்பத்தில் அதிக வேலைவாய்ப்பு


UPDATED : டிச 15, 2009 12:00 AM

ADDED : டிச 15, 2009 08:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 15, 2009 12:00 AM ADDED : டிச 15, 2009 08:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெரியார் அறிவியல் ஆராய்ச்சி மையம் மற்றும் தமிழக அறிவியல் அகடமி இணைந்து நடத்திய, நானோ தொழில்நுட்ப வளர்ச்சி குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு, பெரியார் அறிவியல் அராய்ச்சி மையத்தில் நடந்தது.

இந்த கருத்தரங்கில், நானோ தொழில்நுட்பத்தின் இன்றைய தேவை மற்றும் வளர்ச்சி குறித்து,   நானோ தொழில்நுட்ப விஞ்ஞானி ஹேர்பர்ட் கிலிட்டியர் மற்றும் தமிழக அறிவியல் அகடமியின் தலைவர் ஆனந்தகிருஷ்ணன் இணைந்து, கல்லூரி மாணவர்களுக்கு விளக்கமளித்தனர்.

இந்நிகழ்ச்சியில் ஆனந்தகிருஷ்ணன் பேசியதாவது: நானோ தொழில்நுட்பம், உலகளவில் அறிவியல் துறையில் மிகப்பெரிய புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. நானோ தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் துறை. இந்துறையால் மற்ற துறைகளும் வளம் பெறும். நானோ துகள்கள் என்பது, மயிரிழையில் ஒரு லட்சம் பங்கு குறைந்தது.

இயற்பியல், வேதியல், உலோக அறிவியல் மற்றும் மருத்துவம் என, எந்த துறையை எடுத்துக் கொண்டாலும், அதில் நானோ தொழில்நுட்பம் உண்டு. எம்.எஸ்சி., படிப்பவர்களில் நிறைய பேருக்கு, அவர்கள் சார்ந்த துறையில் வேலை வாய்ப்பு எப்படி உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடிவதில்லை. அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்னும் பத்து வருட காலத்திற்கு, நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் படிப்பவர்களுக்கு அபரிமிதமான வேலைவாய்ப்பு உள்ளது. இவ்வாறு
ஆனந்தகிருஷ்ணன் பேசினார்.

நானோ விஞ்ஞானி ஹேர்பர்ட் கிலிட்டியர் பேசியதாவது:

இந்தியாவில் நானோ தொழில் நுட்பம் எவ்வாறு உள்ளது என்பது எனக்கு தெரியாது. ஆனால், உலகளவில் நானோ தொழில்நுட்பத்தின் பங்களிப்பு என்பது, எந்த பொருளாகட்டும், உலோக தயாரிப்பாகட்டும் அல்லது மின் பொருட்கள் தயாரிப்பாகட்டும், தனது பங்களிப்பை தந்து வருகிறது. நானோ தொழில்நுட்பம் மருத்துவத்துறையிலும் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. நானோ தொழில்நுட்பம் கொண்டு, சூரியசக்தி செல்களை உருவாக்கலாம். ஆனால் அதற்கு செலவிடப்படும் தொகை அதிகமாக இருக்கும்.

இவ்வாறு ஹேர்பர்ட் கிலிட்டியர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், சென்னை அறிவியல் நகரத்தின் துணைத் தலைவர் அய்யம்பெருமாள், அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் ராமசாமி, தமிழக அறிவியல் அகடமியின் துணைத் தலைவர் தேவநாதன் மற்றும் அறிவியல் நகரத்தின் அறிவியல் அதிகாரி தேவசேனாபதி ஆகியோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us