தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தஞ்சை மருத்துவக்கல்லூரி பொன் விழா ஆண்டு துவக்கம்

தஞ்சை மருத்துவக்கல்லூரி பொன் விழா ஆண்டு துவக்கம்

தஞ்சை மருத்துவக்கல்லூரி பொன் விழா ஆண்டு துவக்கம்


UPDATED : டிச 15, 2009 12:00 AM

ADDED : டிச 15, 2009 08:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 15, 2009 12:00 AM ADDED : டிச 15, 2009 08:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு












நுண்கலை மன்ற செயலாளர் அன்பழகன் வரவேற்றார். டீன் ரவிசங்கர் தலைமை வகித்தார். மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற பல்வேறு போட்டிகள் நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி  லெக்டர் சண்முகம் பேசியதாவது:

மருத்துவர் பணி என்பது மக்களுக்கு சேவை செய்வதற்கான சிறந்த பணியாகும். இந்த நல்ல வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது. உங்களது பொறுப்பு இந்தப்பணியில் மிக அதிகம். இந்த சேவையை மனதளவில், தனிப்பட்ட அக்கறையை நோயாளிகளிடம் காண்பிக்க வேண்டும். அதுவே, நோயாளிகளுக்கு ஊக்கத்தையும், ஆதரவையும் அளிக்கும். நீங்கள் தேர்வு செய்துள்ள இந்த துறையில் உங்களை நன்றாக தயார்படுத்திக் கொண்டு சிறப்பாக பணியாற்றி, எதிர்காலத்தில் சிறந்தவர்களாக உயர தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.

தஞ்சை மருத்துவக் கல்லூரி மிகவும் பாரம்பரியமான கல்லூரி. இக்கல்லூரிக்கு தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

துணை முதல்வர் இளங்கோவன், நுண்கலை மன்ற ஆசிரியர் ஆலோசகர் குலாம்மொய்தீன், தலைமை மகப்பேறு மருத்துவர் சொரூபராணி, உடலியங்கியல் பிரிவு டாக்டர் வினோதா, டாக்டர்கள் ராதிகாமைக்கேல், விஜயலட்சுமி, பாலசுப்பிரமணியன், மாணவர் தலைவர் வெங்கடேஷ்வர், செயலாளர் விஜயபாண்டியன், தமிழ் மன்ற செயலாளர் தீபக்குமார், இணைத்தமிழ் மன்ற செயலாளர் பூர்ணிமா உட்பட பலர் பங்கேற்றனர். இணை நுண்கலை மன்ற செயலாளர் பிரதீபா நன்றி கூறினார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us