தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேர்தல் பணியில் ஈடுபட்ட மாணவர்கள் பெருமிதம்

தேர்தல் பணியில் ஈடுபட்ட மாணவர்கள் பெருமிதம்

தேர்தல் பணியில் ஈடுபட்ட மாணவர்கள் பெருமிதம்


UPDATED : டிச 20, 2009 12:00 AM

ADDED : டிச 20, 2009 03:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 20, 2009 12:00 AM ADDED : டிச 20, 2009 03:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வந்தவாசி தொகுதியில் உள்ள 217 பூத்களிலும் நடந்த ஓட்டுப் பதிவு வெப்-கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டது. கள்ள ஓட்டுக்கு முற்று புள்ளி வைக்கும் விதத்தில் கொண்டு வரப்பட்ட வெப்-கேமரா வாக்காளர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

வெப்-கேமரா மூலம் ஓட்டுப் பதிவு செய்யும் பணியை முதல் முறையாக கல்லூரி மாணவர்களை நியமித்தது தேர்தல் கமிஷன். திருவண்ணாமலை, செய்யாறு அரசு மற்றும் தனியார் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதுவரை அரசு ஊழியர்கள் மட்டுமே செய்த வேலையை மாணவர்கள் செய்தது ஆச்சரியத்தையும், புதுமையும் ஏற்படுத்தியுள்ளது.

வெப்-கேமரா பணியில் ஈடுபட்ட திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாம் ஆண்டு மாணவர் பிரகாஷ் கூறியதாவது: இதுவரை அரசு ஊழியர்கள் மட்டுமே தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். முதல் முறையாக மாணவர்களை பயன்படுத்தி, எங்கள் மாணவ சமுதாயத்தை பெருமைப்படுத்தியுள்ளது தேர்தல் கமிஷன். தேர்தல் பணியில் வெப்-கேமரா பயன்படுத்துவது குறித்து எங்களுக்கு கமிஷன் பயிற்சி அளித்தது. பின், ஆளுக்கு ஒரு லேப்-டாப், இரண்டு வெப்-கேமராக்கள் கொடுத்து ஓட்டுச் சாவடிக்கு அனுப்பி வைத்தனர்.

ஒரு கேமரா மூலம் பூத்தில் உள்ள வளாகம் முழுவதும் உள்ள சூழ்நிலையை படம் பிடிக்கும். இதன் மூலம் ஒவ்வொரு பூத்திலும் என்ன நடக்கிறது என்பதை தேர்தல் கமிஷன் நேரடியாக தெரிந்து கொள்ளும். இரண்டாவது கேமரா, வாக்காளர்களை படம் பிடிக்கவும், ஏற்கனவே கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ள அவரது படத்தை சரிபார்த்துக் கொள்ளவும் பயன்படுத்தப்பட்டது.

ஓட்டு பதிவு முடிந்தவுடன் தகவல்கள் அனைத்தும் சிடிக்களில் பதிவு செய்தோம். இவற்றை தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்து விட்டோம். இப்பணிக்காக 750 ரூபாய் சன்மானம் வழங்கப்பட்டது. பணம் எங்களுக்கு முக்கியமில்லை. நியாயமான, தேர்தல் நடைபெற எங்களுக்கும் சிறு வாய்ப்பு வழங்கியதைத் தான் நாங்கள் பெரும்பாக்கியமாக கருதுகிறோம். தேர்தல் கமிஷன் எங்கள் மீது நம்பிக்கை வைத்து அளிக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்து முடித்தோம் என்ற திருப்தி ஏற்பட்டுள்ளது. இவ்வாறு மாணவர் பிரகாஷ் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us