தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கேட் தேர்வில் மோசடி மாணவர்கள் வெளியேற்றம்

கேட் தேர்வில் மோசடி மாணவர்கள் வெளியேற்றம்

கேட் தேர்வில் மோசடி மாணவர்கள் வெளியேற்றம்


UPDATED : டிச 22, 2009 12:00 AM

ADDED : டிச 22, 2009 01:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 22, 2009 12:00 AM ADDED : டிச 22, 2009 01:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு


இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக நடத்தப்படும் கேட் நுழைவுத் தேர்வு, இந்தாண்டு கம்ப்யூட்டர் மூலம் நடத்தப் பட்டது. இதற்கான மென்பொருளை, புரோமெட்ரிக் என்னும் நிறுவனம் வழங்கியது.


இந்தாண்டு நடந்த தேர்வில், பங்கேற்ற மாணவர்களில் சிலர், பிற மாணவர்களின் கம்ப்யூட்டர் திரைகளை பார்த்தும், கலந்தாலோசித்தும் தேர்வுகள் எழுதி உள்ளனர். இது, கேமரா மூலம் கண்டுபிடிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட மாணவர்கள் தேர்வு மையத்தில் இருந்து வெளியேற்றப் பட்டதாக, புரோமெட்ரிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.


இதுகுறித்து புரோமெட்ரிக் நிறுவனத்தின் இந்தியாவிற்கான மேலாண்மை இயக்குனர் சவுமித்ரா ராய் கூறியதாவது: வீடியோ காட்சிகள், தேர்வு மையத்தில் இருந்து அளிக்கப்பட்ட அறிக்கைகள், தேர்வு கண்காணிப்பாளர்கள் மற்றும் தேர்வு மைய நிர்வாகிகள் ஆகியோர் அளித்த அறிக்கையின் அடிப்படையில், புரோமெட்ரிக் நிறுவனம், இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்கள் (ஐ.ஐ.எம்.,)களிடம் தகவல் தெரிவிக்க உள்ளது.


சில மாணவர்கள் தேர்வு நேரத்திலேயே மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் தேர்வு மையத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். வேறு யாரேனும் ஏமாற்று வேலையில் ஈடுபட்டுள்ளனரா என்பதை கண்டறிய, தற்போது தேர்வு முடிவுகள் மற்றும் வீடியோ காட்சிகள் ஆகியவற்றை ஆய்வு செய்து வருகிறோம். அவ்வாறு யாரேனும், விதிமுறைகளை மீறியது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் பற்றிய தகவல்களை ஐ.ஐ.எம்.,க்கு அனுப்புவோம். அந்த மாணவரை தேர்ந்தெடுப் பதா அல்லது நிராகரிப்பதா என்பதை அவர்களே தீர்மானித்துக் கொள்வர். இவ்வாறு சவுமித்ரா ராய் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us