தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தினமலர் இதழுக்கு லயன்ஸ் ஆளுநர் விருது

தினமலர் இதழுக்கு லயன்ஸ் ஆளுநர் விருது

தினமலர் இதழுக்கு லயன்ஸ் ஆளுநர் விருது


UPDATED : டிச 22, 2009 12:00 AM

ADDED : டிச 22, 2009 01:43 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 22, 2009 12:00 AM ADDED : டிச 22, 2009 01:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக 1994 முதல், ஜெயித்துக்காட்டுவோம் என்ற நிகழ்ச்சியை தினமலர் நடத்தி வருகிறது. பிளஸ் 2 தேர்வில் வென்ற மாணவர்கள் உயர்கல்வியை தேர்வு செய்ய வழிகாட்டும் வழிகாட்டி என்ற நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் இதனால் பயன்பெறுகின்றனர்.

சமூக அக்கறையோடு, மதுரையின் வளர்ச்சியை முழுமூச்சாக கொண்டு, தினமலர் மதுரை இணைப்பில் மதுரையை மீட்போம் என்ற பகுதியை வெளியிட்டு வருகிறது. தினமலர் இதழின் இந்த கல்விச் சேவை, சமூக அக்கறை ஆகியவற்றை பாராட்டி மதுரையில் நடந்த நிகழ்ச்சியில், லயன்ஸ் மாவட்டம்(324-பி 3) சார்பில் ஆளுநர் விருது வழங்கப்பட்டது.
 
லயன்ஸ் ஆளுநர் வேலுச்சாமி விருதை வழங்க தினமலர் சார்பில் தலைமை நிருபர் ஜி.வி.ரமேஷ் குமார் பெற்றுக்கொண்டார். சிறப்பு விருந்தினராக திரைப்பட இயக்குனர் ஆதவன் கலந்து கொண்டார். துணை ஆளுநர்கள் சின்ன அருணாச்சலம், நந்தகுமார், முன்னாள் ஆளுநர்கள் நாகராஜன், தங்கராஜ், லியோ கிளப் தலைவர் நெல்லை பாலு பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us