தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நேரடி எம்.ஏ., படித்து பதவி வகிப்பவர்கள் கணக்கெடுப்பு

நேரடி எம்.ஏ., படித்து பதவி வகிப்பவர்கள் கணக்கெடுப்பு

நேரடி எம்.ஏ., படித்து பதவி வகிப்பவர்கள் கணக்கெடுப்பு


UPDATED : டிச 22, 2009 12:00 AM

ADDED : டிச 22, 2009 01:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 22, 2009 12:00 AM ADDED : டிச 22, 2009 01:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திறந்த வெளி பல்கலை மூலம், 25 வயது பூர்த்தியானோர் நேரடியாக முதுகலை பட்டம் (எம்.ஏ.,) பெறலாம் என, 1988ல் அறிவிப்பு வெளியானது. இந்த எம்.ஏ.,வுக்கு, கல்வித்தகுதி தேவையில்லை என்பதால், நாடு முழுதும் 25 வயது பூர்த்தியான ஏராளமானோர், எம்.ஏ., பட்டம் பெற்றனர். மேல்படிப்பாக, பலர் எம்.பில்., மற்றும் பி.எச்டி., பெற்று முனைவர் பட்டமும் பெற்றனர். சட்டப்படிப்பில் பி.எல்., மற்றும் எம்.எல்., முடித்து பலர் நீதித்துறையில் மாஜிஸ்திரேட்டுகளாகவும், பதவி உயர்வில் சார்பு நீதிபதிகளாகவும் உள்ளனர்.

பிளஸ் 2 தகுதி இருந்தால், போலீஸ் எஸ்.ஐ., தேர்வு எழுத அனுமதி இருந்தது. தற்போது, எஸ்.ஐ., தேர்வுக்கு, இளங்கலை பட்டம் வேண்டும். இந்த அறிவிப்பால் நேரடி எம்.ஏ., படித்த பலர், எஸ்.ஐ.,யாக தேர்வாகினர். இவர்களில் ஏராளமானோர், இன்ஸ்பெக்டர் மற்றும் டி.எஸ்.பி., பதவி உயர்வுக்காக காத்திருக்கின்றனர். தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம், குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வு எழுதி சப்-கலெக்டர், சார்-பதிவாளர், ஆர்.டி.ஓ., மற்றும் வருவாய் ஆய்வாளர் என உயர் பதவி வகிக்கின்றனர்.

பொதுநலன் வழக்கு ஒன்றில், விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட், நேரடி எம்.ஏ., பட்டம் தகுதியற்றது என தீர்ப்பு வழங்கியது. இந்த உத்தரவை சுட்டிக்காட்டி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், நேரடி எம்.ஏ., படித்து வக்கீல் தொழில் செய்து வந்த 100 பேரின், அங்கீகாரத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. பார் கவுன்சில் அளித்த அடையாள அட்டை, மற்றும் தகுதி சான்றினை 15 நாட்களில் ஒப்படைக்கும்படி எச்சரிக்கை விடுத்துள்ளது
.

தமிழக அரசுத்துறையில், நேரடி எம்.ஏ., பட்டதாரிகள் எத்தனை பேர், பதவியில் உள்ளனர் என்ற விவரம் கேட்டு, மதுரை வக்கீல் எஸ். முத்துக்குமார், ஐகோர்ட் கிளையின் தகவல் அறியும் அலுவலரிடம் மனு அளித்தார்
.

அவரது மனு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, நேரடி எம்.ஏ., பட்டம் பெற்று பதவி வகிப்பவர் குறித்து, துறை ரீதியாக கணக்கெடுப்பு நடக்கிறது. பட்டியல் வெளியாகும் பட்சத்தில், அரசு பதவி வகிப்பவர், பதவியில் நீடிப்பாரா என்பது குறித்து, தமிழக அரசு தகுந்த முடிவெடுக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us