தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இணையதளத்தில் பட்டதாரி ஆசிரியர் பரிந்துரை பட்டியல்!

இணையதளத்தில் பட்டதாரி ஆசிரியர் பரிந்துரை பட்டியல்!

இணையதளத்தில் பட்டதாரி ஆசிரியர் பரிந்துரை பட்டியல்!


UPDATED : டிச 26, 2009 12:00 AM

ADDED : டிச 26, 2009 12:47 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 26, 2009 12:00 AM ADDED : டிச 26, 2009 12:47 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இது குறித்து தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி கலைச்செல்வன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;


ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 6 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு 1:5 என்ற விகிதத்தில் பரிந்துரைப்பட்டியல் அனுப்பும் பணி வேலைவாய்ப்பு துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணியிடங்கள் அனைத்தும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில் நியமனம் மேற்கொள்ளப்படுவதால், பட்டியலின் விடுபாடுகளை தவிர்ப்பதற்காக அனைத்துவகை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
 
இதன் முதல் கட்டமாக ஒவ்வொரு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் 30.11.2009 வரை பதிவு செய்துள்ள அனைத்து பட்டதாரி ஆசிரியர்கள் பதிவு விபரங்களும் அந்தந்த மாவட்ட தேசிய தகவல் மையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பட்டதாரி ஆசிரியர்களின் பதிவு பட்டியல் 11.12.2009 டபுள்யூடபுள்யூடபுள்யூ தூத்துக்குடி டிஎன் என்ஐசிஐஎன் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது.பட்டியலில் பெயர் திருத்தம், பிறந்ததேதி மாற்றம், பாடப்பிரிவு மாற்றம், ஜாதி மாற்றம், முன்னுரிமை பதிவு போன்ற பல்வேறு காரணங்களுக்காக பட்டியலில் திருத்தம் வேண்டி பெறப்பட்ட மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியுடைய திருத்தங்களுடன் திருத்திய பட்டதாரி ஆசிரியர் பதிவுதாரர்கள் பட்டியல் <http://www.thoothukudi. tn.nic.in >. இணையத்தளத்தில் 24.12.2009 அன்று மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 30.11.2009 வரை பதிவு செய்துள்ள பட்டதாரி ஆசிரியர் கல்வித்தகுதி பதிவுதாரர்கள், பதிவுதாள் பட்டியலில் தங்களது பெயர், பதிவு எண், பிறந்த தேதி, பாடப்பிரிவு, இனம், வகுப்பு, பதிவு தேதி போன்ற அனைத்து விபரங்களும் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ளலாம்.
 
 இரண்டு பாடங்களுக்கு (பி.ஏ, பி.எஸ்.சி) பெற்று பதிவு செய்துள்ள பட்டதாரி ஆசிரியர்கள் இரண்டு பாடப்பிரிவுகளிலும் தங்கள் பெயர் இடம் பெற்றுள்ளதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். இந்த பட்டியலில் இருந்து 1:5 என்ற விகிதத்தில் மாநில அளவிலான பரிந்துரை பட்டியல் வேலைவாய்ப்புத்துறை ஆணையரால் 15.1.2010 க்குள் www.employment.tngov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். இவ்வாறு வேலைவாய்ப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us