UPDATED : ஜூன் 26, 2023 12:00 AM
ADDED : ஜூன் 26, 2023 02:24 AM
ஒத்தக்கடை:
கல்வியும் திறமையும் நாணயத்தின் இருபக்கங்கள் போன்றது. இன்றைய இளையோர் சக்திவாய்ந்த, புதுமையான படைப்புகளை உருவாக்கும் உத்வேகம் உடையவர்கள் என வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி பேசினார். மதுரை வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி மையம், சமுதாய அறிவியல் கல்லுாரி சார்பில் மாணவர்களுக்கு இடையேயான டேலன்ஷியா 2023 எனும் பல்திறன் போட்டி நடந்தது.துணைவேந்தர் கீதாலட்சுமி துவக்கிவைத்தார். மாணவர்கள் சங்க ஆலோசகர் பாக்கியாதூஷாலிகா, செயலாளர் மனோஜ் வரவேற்றனர். வேளாண் கல்லுாரி டீன் மகேந்திரன்தலைமை வகித்தார். அறிவியல் கல்லுாரி டீன் காஞ்சனா பேசினார்.துணைவேந்தர் பேசுகையில், மாணவர்களின் தனித்திறனை வெளியே கொண்டுவர இதுபோல் போட்டி நடத்துவது சிறப்பு. வேலைவாய்ப்பு சார்ந்த திறமைகளை வளர்த்துக்கொள்ள உதவும் என்றார். சங்க ஆலோசகர் சாந்தி நன்றி கூறினார். முன்னாள் மாணவர்கள் சங்கத்தை துணைவேந்தர் துவக்கி வைத்தார். தலைவராக முதல்வர் மகேந்திரன், துணைத்தலைவர் மோகன், செயலாளர் தவசுமுத்து, துணைத் தலைவர்மணிசேகரன், பொருளாளர் சண்முகம் உள்ளிட்டோர் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.
