UPDATED : ஜூன் 27, 2023 12:00 AM
ADDED : ஜூன் 27, 2023 09:41 AM
சென்னை:
தமிழகத்தில் கடந்த ஆண்டு 1,545 பள்ளிகளில் ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் துவக்கப்பட்டது. இந்த ஆண்டு படிப்படியாக அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்தப்பட உள்ளது.இந்நிலையில் காலை உணவு வகைகளில் காய்கறி வகைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சிறிது மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.உணவு வகைகள்
திங்கள் - காய்கறி சாம்பாருடன் உப்புமா; செவ்வாய் - காய்கறி சாம்பாருடன் கிச்சடி; புதன் - காய்கறி சாம்பாருடன் பொங்கல் அல்லது வெண் பொங்கல்; வியாழன் - காய்கறிசாம்பாருடன் உப்புமா; வெள்ளி - காய்கறி சாம்பாருடன் கிச்சடி; உப்புமா, கிச்சடியை ரவா, சேமியா, அரிசி அல்லது கோதுமை ஏதாவது ஒன்றில் தயாரிக்க வேண்டும். வாரத்தில் குறைந்தது இரண்டு நாட்களாவது, உள்ளூரில் கிடைக்கும் சிறு தானியங்களால் தயாரான காலை உணவைவழங்கலாம்.அளவு கட்டாயம்
ஒவ்வொருவருக்கும் வழங்கும் உணவுக்கான மூலப் பொருட்களின் அளவு 50 கிராம் இருக்க வேண்டும்; அந்தந்த இடங்களில் விளையும் சிறு தானியங்கள், சாம்பாருக்கான பருப்பு 15 கிராம்; உள்ளூரில் கிடைக்கும் காய்கறிகள்; சமைத்த பின் 150 - 200 கிராம் உணவு; 100 மி.கி., காய்கறியுடன் கூடிய சாம்பார் வழங்க வேண்டும்.
