UPDATED : ஜூன் 29, 2023 12:00 AM
ADDED : ஜூன் 29, 2023 04:56 AM
ராசல் கைமா:
ராசல் கைமா அமெரிக்க பல்கலைக்கழகத்தில் 9வது சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சி இந்திய துணை தூதரகம் மற்றும் இந்திய மக்கள் பேரவையின் ஆதரவுடன் நடந்தது. நிகழ்ச்சியில் இந்திய துணை தூதரக அதிகாரி பிஜேந்தர் சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் தனது உரையில் உடல் நலம், மனநலம் பேண சிறப்பாக இருப்பதற்கு யோகா பயிற்சி உதவியாக இருப்பதாக குறிப்பிட்டார்.இதனை ஒவ்வொருவரும் தங்களது அன்றாட வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும். இந்தியாவில் இருந்து உலகிற்கு கிடைத்த மிகப்பெரிய அன்பளிப்பாக யோகா இருக்கிறது. யோகா பயிற்சியினை பயிற்றுநர்கள் செய்து காண்பிக்க அதனை பின்பற்றி பல்கலைக்கழக மாணவ, மாணவியர் உள்ளிட்ட பலர் யோகாவை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் பல்கலைக் கழக துணைத் தலைவர் பேராசிரியர் ஸ்டீபன் சி ஒயிட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
