UPDATED : ஜூலை 01, 2023 12:00 AM
ADDED : ஜூலை 01, 2023 09:44 AM
சென்னை:
மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் அறக்கட்டளை துவங்க, தமிழார்வலர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து, அதன் பொறுப்பு இயக்குனர் அருள் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
தமிழக அரசின் நிறுவனமான மதுரை உலகத் தமிழ்ச் சங்கம், உலக தமிழர்களை ஒருங்கிணைக்கும் வகையிலும், தமிழ் வளர்ச்சிக்கு உதவும் வகையிலும் செயல்படுகிறது. அதன் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில், அறக்கட்டளைகள் நிறுவப்படுகின்றன. இதில், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் புரவலர்கள் இணைந்து அறக்கட்டளை நிறுவி, தமிழ் வளர்ச்சி பணிகளை மேம்படுத்தலாம். விருப்பமுள்ளோர், தங்கள் பெயரிலோ அல்லது விருப்பமானோரின் பெயரிலோ அறக்கட்டளையை நிறுவலாம். இதற்கு குறைந்தபட்சம் ஐந்து லட்சம் ரூபாயை வைப்பு நிதியாக செலுத்தி, ஆண்டுதோறும் தாங்கள் விரும்பும் நாளில், தமிழ் நிகழ்வை சிறப்பாக நடத்தலாம். பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் செலுத்தி, அறக்கட்டளை துவக்கி, அதன் சொற்பொழிவுகளை நுாலாகவும் பதிப்பிக்கலாம். இயக்குனர், உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை, 625 020 என்ற முகவரியிலும், 0452 - 263 2799 என்ற தொலைபேசி எண் மற்றும் utsmdu.reaserch@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
