தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குன்றத்துார், அண்ணா நகரில் இன்று தினமலர் வழிகாட்டி

குன்றத்துார், அண்ணா நகரில் இன்று தினமலர் வழிகாட்டி

குன்றத்துார், அண்ணா நகரில் இன்று தினமலர் வழிகாட்டி


UPDATED : ஜூலை 01, 2023 12:00 AM

ADDED : ஜூலை 01, 2023 09:43 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 01, 2023 12:00 AM ADDED : ஜூலை 01, 2023 09:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தினமலர் நாளிதழ் சார்பில், இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கு உதவும் வழிகாட்டி நிகழ்ச்சி சென்னை குன்றத்துார் மற்றும் அண்ணா நகரில் இன்று நடக்கிறது.இன்ஜினியரிங் கவுன்சிலிங்குக்கு விண்ணப்பித்த மாணவர்கள், தங்களுக்கு விருப்பமான கல்லுாரி மற்றும் பாடப்பிரிவுகளை தேர்வு செய்வதற்கு வழிகாட்டும் வகையில், தினமலர் சார்பில், வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. குன்றத்துாரில் உள்ள சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நிறுவனத்தில், காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 வரையிலும், அண்ணா நகர் மேற்கில் உள்ள, எஸ்.பி.ஓ.ஏ., ஜூனியர் கல்லுாரி வளாகத்தில், பிற்பகல் 3:00 மணி முதல் மாலை 6:00 வரையிலும், வழிகாட்டி நிகழ்ச்சி நடக்கிறது. இதில் அண்ணா பல்கலை மாணவர் சேர்க்கை பிரிவு முன்னாள் இயக்குனர் நாகராஜன், இன்ஜினியரிங் கவுன்சிலிங் நடைமுறைகள் குறித்து பேச உள்ளார். கல்வி ஆலோசகர் அஸ்வின், வாய்ப்புகள் மிகுந்த இன்ஜினியரிங் பிரிவுகள் குறித்து ஆலோசனை வழங்க உள்ளார்.இலவச பஸ் வசதி
குன்றத்துாரில் உள்ள சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நிறுவனத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க, குன்றத்துார் பஸ் நிலையத்தில் இருந்து, காலை 9:00 மணிக்கு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்க எந்தவித கட்டணமும் இல்லை. பங்கேற்க விரும்புவோர், www.kalvimalar.com என்ற இணையதளம் அல்லது 91505 74441 என்ற மொபைல் போனில் தங்கள் விபரங்களை முன்பதிவு செய்யலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us