தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உலகில் நீண்ட தூர சைக்கிள் பயணம்

உலகில் நீண்ட தூர சைக்கிள் பயணம்

உலகில் நீண்ட தூர சைக்கிள் பயணம்


UPDATED : ஜூலை 01, 2023 12:00 AM

ADDED : ஜூலை 01, 2023 05:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 01, 2023 12:00 AM ADDED : ஜூலை 01, 2023 05:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்:
பொள்ளாச்சியை சேர்ந்த பட்டதாரி இளைஞர் முத்துசெல்வன், 26. இவர் சைக்கிள் மூலம் 34,300 கி.மீ., துாரம் பயணித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடிப்பதற்காக கடந்த 2021ல் சைக்கிள் பயணத்தை துவங்கினார். இவர், ஆந்திரா, மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், லடாக், காஷ்மீர், பஞ்சாப், கர்நாடகா வழியாக, கேரளா செல்லவுள்ளார். நேற்று ஓசூர் வந்த இளைஞர் முத்துசெல்வனை, ஓசூர் மாநகர மேயர் சத்யா, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.இது குறித்து முத்துசெல்வன் கூறுகையில், இதுவரை 18 ஆயிரம் கி.மீ., துாரம் பயணித்துள்ளேன். 2025, ஜன.,ல் டில்லியில் தன் சைக்கிள் பயணத்தை நிறைவு செய்ய உள்ளேன். கியர் இல்லாத சாதாரண சைக்கிளில் 120 கிலோ எடையுள்ள அத்தியாவசிய பொருட்களுடன் பயணிக்கிறேன். இரவில் செல்லும் வழியிலுள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் தங்குகிறேன் என்றார்.தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் எல்லோராமணி, பகுதி செயலாளர் வெங்கடேஷ் மற்றும் பலர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us