UPDATED : ஜூலை 03, 2023 12:00 AM
ADDED : ஜூலை 03, 2023 03:00 AM
இங்கிலாந்தில் செயல்படும், எலிபென்ட் பேமிலி என்ற சர்வதேச தொண்டு நிறுவனம் ஆசிய யானைகளை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அந்த நிறுவனத்துடன், இந்தியாவில் உள்ள ரியல் எலிபென்ட் என்ற நிறுவனம் இணைந்து, நீலகிரி மாவட்டம், முதுமலை தொரப்பள்ளி பகுதியில் வாழும் பழங்குடி மக்களுக்கு உண்ணி களைச்செடிகளை பயன்படுத்தி யானை உருவங்களை தத்ரூபமாக உருவாக்கி விற்பனை செய்யும் பயிற்சியை அளித்து வருகிறது. லென்டானா என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் உண்ணி செடிகள் மூலம் பழங்குடியின மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது.இந்நிலையில், இப்பணியில் ஈடுபட்டுள்ள பெட்ட குரும்பர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ரமேஷ்மாறன், விஷ்ணுவர்தன் ஆகியோருக்கு, இங்கிலாந்தில் கடந்த 29ல் நடந்த நிகழ்ச்சியில், மார்க்சண்ட் என்ற விருதை, இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ், ராணி கமீலா வழங்கினர். இதே விழாவில், ஊட்டியைச் சேர்ந்த ஆஸ்கார் விருது பெற்ற எலிபென்ட் விஸ்பரர்ஸ் ஆவண பட இயக்குனர் கார்த்திகி கனசால்வசுக்கும் விருது வழங்கப்பட்டது.
