தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உத்திரமேரூர் கல்லுாரியில் நாளை வராண்டா சேர்க்கை

உத்திரமேரூர் கல்லுாரியில் நாளை வராண்டா சேர்க்கை

உத்திரமேரூர் கல்லுாரியில் நாளை வராண்டா சேர்க்கை


UPDATED : ஜூலை 03, 2023 12:00 AM

ADDED : ஜூலை 03, 2023 02:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 03, 2023 12:00 AM ADDED : ஜூலை 03, 2023 02:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்:
உத்திரமேரூர் டாக்டர் எம்.ஜி.ஆர்., அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 2023- 24 கல்வி ஆண்டிற்கான வராண்டா மாணவர் சேர்க்கை நாளை துவங்குகிறது.இதுகுறித்து உத்திரமேரூர் டாக்டர் எம்.ஜி.ஆர்., அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் பொறுப்பு முனைவர் ரங்கசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக அரசின் உத்தரவின்படி உத்திரமேரூர் அடுத்த, திருப்புலிவனத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர்., அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 2023-24ம் கல்வியாண்டிற்கான வராண்டா மாணவ, மாணவியர் சேர்க்கை நாளை காலை 9:30 மணிக்கு பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., என அனைத்து பாடப்பிரிவுகளுக்கான சேர்க்கை நடக்கிறது. அதன்படி நாளை பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கும், ஜூலை 5ல் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கும், ஜூலை 6ல் ஆதிதிராவிடருக்கும், ஜூலை 7ல் அனைத்து தகுதியான விண்ணப்பதாரர்களுக்கும் சேர்க்கை நடக்கிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us