தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மருத்துவ கல்லுாரியில் பள்ளி மாணவர்களுக்கு விளக்கம்

மருத்துவ கல்லுாரியில் பள்ளி மாணவர்களுக்கு விளக்கம்

மருத்துவ கல்லுாரியில் பள்ளி மாணவர்களுக்கு விளக்கம்


UPDATED : ஜூலை 03, 2023 12:00 AM

ADDED : ஜூலை 03, 2023 02:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 03, 2023 12:00 AM ADDED : ஜூலை 03, 2023 02:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆண்டிபட்டி:
தேசிய டாக்டர்கள் தினத்தை முன்னிட்டு கல்வி மெட்ரிக் பள்ளியின் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்கள் 33 பேர் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி சிறப்பு இயக்குனர் டாக்டர் மீனாட்சி சுந்தரத்தை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மாணவர்கள் உடற்கூறியல் சட்ட மருத்துவத் துறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மனித உடலின் பாகங்கள் குறித்து வகுப்பு எடுக்கப்பட்டது.மனித உடலில் உள்ள எலும்புகளையும் வயிற்றில் உள்ள உறுப்புகள் அனைத்தையும் மாணவர்கள் நேரடியாக பார்வையிட்டனர். சட்ட மருத்துவத்துறையில் டாக்டர்கள் போலீசாருக்கு எந்த விதமான உதவிகளை செய்கிறார்கள் என்பது பற்றியும் விளக்கப்பட்டது. உடற்கூறியல் குறித்த பள்ளி மாணவ மாணவிகளின் சந்தேகங்களுக்கு டீன், பேராசிரியர்கள் விளக்கம் அளித்தனர். நிகழ்ச்சியில் துணை முதல்வர் டாக்டர் சுசிலா தங்கம், நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் சந்திரா, உடற்கூறியல் துறை தலைவர் டாக்டர் எழிலரசன், இணை பேராசிரியர் டாக்டர் கற்பக ஜோதி, சட்ட மருத்துவத் துறை தலைவர் டாக்டர் அருண் குமார், கல்வி மெட்ரிக் பள்ளி பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us