தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ரோபோட்டிக் பயிற்சி அரசு பள்ளிகள் தேர்வு

ரோபோட்டிக் பயிற்சி அரசு பள்ளிகள் தேர்வு

ரோபோட்டிக் பயிற்சி அரசு பள்ளிகள் தேர்வு


UPDATED : ஜூலை 08, 2023 12:00 AM

ADDED : ஜூலை 08, 2023 09:32 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 08, 2023 12:00 AM ADDED : ஜூலை 08, 2023 09:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
ஆறு மாத இலவச ரோபோட்டிக் பயிற்சி வகுப்பு துவக்க விழா, காந்தி மாநகர் அரசு உயர்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.கோவை மாவட்டத்தில், ஒப்பணக்கார வீதி, துடியலுார், கணபதி, பீடம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் காந்தி மாநகர் அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும், ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இலவச ரோபோட்டிக் பயிற்சி வகுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.ஸ்கிலம்பர்ஜெர் சொல்யூஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் லெர்னிங் லிங்க்ஸ் பவுண்டேஷன் இணைந்து நடத்தும் இப்பயிற்சிக்கு, தேவையான உபகரணங்கள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டதோடு, பயிற்சியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். தினமும் ஒரு மணி நேரம் பயிற்சி வகுப்பு நடத்தப்படும். ரோபோக்களை கொண்டு, 150 செயல்மாதிரிகள் பயிற்றுவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.விழாவில், முதன்மை கல்வி அலுவலர் சுமதி பேசுகையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழில்நுட்பங்களை கற்றுத்தருவதன் மூலம், அவர்கள் உயர்கல்வி செல்வதற்கான, ஆர்வத்தை துாண்ட முடியும். ரோபோட்டிக் பயிற்சி முடித்து, மாணவர்களின் திறன்களை அங்கீகரிக்க வேண்டும். இவ்வாய்ப்பை பயன்படுத்தி, மாணவர்கள் பயிற்சி பெறுவது அவசியம், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us