ஒடிசாவில் ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் செய்தி வாசிப்பாளர்
ஒடிசாவில் ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் செய்தி வாசிப்பாளர்
UPDATED : ஜூலை 11, 2023 12:00 AM
ADDED : ஜூலை 11, 2023 09:48 AM
நம் நாட்டில் கல்வி, மருத்துவம், போக்குவரத்து, வேளாண்மைத் துறையில் செயற்கை நுண்ணறிவை நடைமுறைப்படுத்த, மத்திய அரசின் நிடி ஆயோக் பரிந்துரைத்துள்ளது. இச்சூழலில், ஒடிசாவை சேர்ந்த, ஓ.டி.வி., எனும் தனியார் தொலைக்காட்சி நிறுவனம், ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, செய்தி வாசிப்பாளரை உருவாக்கி, செய்தியும் வாசிக்க செய்துள்ளது.நேற்று முந்தினம் (ஜூலை.,9)ம் தேதி, விர்ச்சுவல் செய்தி வாசிப்பாளரான, லிசாவின் அறிமுகம் நடந்தது. நிஜத்தில் பார்ப்பதற்கு, செய்தி வாசிப்பாளர் போல், ஒடிசா மாநிலத்தின் பாரம்பரிய கைத்தறி சேலையை கட்டிக்கொண்டு, ஒடியா மற்றும் ஆங்கில மொழியில், செய்தி வாசிக்கும் விதமாக, லிசா உருவாக்கப்பட்டுள்ளது.தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர், ஜகி மங்கட் பாண்டா கூறியுள்ளதாவது:
ஊடகத்துறையில் இதுவொரு மைல்கல்லாக அமைந்துள்ளது. பல மொழிகளில் செய்தி வாசிக்கும் திறன், லிசாவுக்கு உள்ளது. அதிகளவிலான தரவுகளை ஆய்வு செய்வதற்கு, லிசா எங்களுக்கு உதவும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.டிஜிட்டல் பிரிவு, வர்த்தக தலைவர் லித்திஷா மங்கத் பாண்டா கூறியுள்ளதாவது:லிசா மனிதர்களை போல், சரளமாக பேச துவங்கவில்லை. எனினும், லார்ஜ் லாங்குவேஜ் மாடல் மற்றும் ஏ.ஐ., திறன் வாயிலாக, கூகுள் மொழிமாற்றம் போன்ற தளங்களின் தரத்தை, கடந்து நிற்கிறது.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.இந்தியாவில் கடந்த மார்ச் மாதம், சனா எனும், ஏ.ஐ., செய்தி வாசிப்பாளரை, தனியார் செய்தி நிறுவனம், உருவாக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
