UPDATED : ஜூலை 12, 2023 12:00 AM
ADDED : ஜூலை 12, 2023 04:56 PM
சென்னை:
பல்கலைகளில் பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:
பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு, அவர்கள் படிக்கும்போதே தொழிற்சாலைகளில் பயிற்சி அளிக்க, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கோவையில் உள்ள அரசு பொறியியல் கல்லுாரி மாணவர்களுக்கு, வால்மார்ட் நிறுவனம் பயிற்சி அளிக்க முன்வந்துள்ளது. பொறியியல் கலந்தாய்வு விரைவில் நடத்தப்பட்டு, கல்லுாரிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். கலந்தாய்வு நாட்கள் குறைக்கப்படும். பேராசிரியர்கள், துணை பேராசிரியர்களை, அந்தந்த பல்கலைகளே தேர்வு செய்ய, அறிவிப்புகள் வெளியிட்டுள்ளன.இவ்வாறு அவர் தெரிவித்தார்.மேலும் அவர் கூறுகையில், அனைத்து கல்லுாரிகளிலும், பள்ளிகளிலும், கருணாநிதியின் சமூக நீதி வரலாறு, பாடத்திட்டமாக இணைக்கப்படும். சமூக நீதி குறித்த கட்டுரை, கவிதை போட்டிகள், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்பட உள்ளன, என்றார்.
