தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழ் கற்கும் வட மாநில குழந்தைகள்

தமிழ் கற்கும் வட மாநில குழந்தைகள்

தமிழ் கற்கும் வட மாநில குழந்தைகள்


UPDATED : ஜூலை 13, 2023 12:00 AM

ADDED : ஜூலை 13, 2023 09:14 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 13, 2023 12:00 AM ADDED : ஜூலை 13, 2023 09:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
அரசு பள்ளிகளில் படிக்கும் பிற மாநில குழந்தைகளுக்கு, தமிழ் கற்றுக் கொடுத்து, தமிழ்த்தாய் வாழ்த்து பாட வைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக மாணவர்களுக்கு ஹிந்தி கற்று தந்து, வந்தே மாதரம் பாட வைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.பிற மாநிலத்தவரின் குழந்தைகளுக்கு அரசு பள்ளிகளில், தமிழ் கற்போம் என்ற திட்டத்தை, பள்ளிக் கல்வித் துறை அறிமுகம் செய்துள்ளது.மும்மொழி பயன்பாடு
பிற மாநிலத் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் திருப்பூர் மாவட்டத்தில், ஆத்துப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், தமிழ் மொழி கற்பிக்கும் திட்டம், நேற்று முன்தினம் துவங்கப்பட்டது. தமிழ் மொழி கற்ற பிற மாநில குழந்தைகள், நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர். அதை பார்த்து வியந்த பள்ளிக் கல்வி அமைச்சர் மகேஷ், அந்த குழந்தைகள் பாடிய வீடியோவை, டுவிட்டரில் வெளியிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அரசு பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:
பிற மாநில குழந்தைகளுக்கு தமிழ் கற்பிப்பதால், அவர்கள் தமிழக குழந்தைகளுடன் தமிழில் பேசி, எளிதாக பழக முடிகிறது. அதே நேரம், அந்த குழந்தைகளுக்கு ஹிந்தி தாய்மொழியாக இருப்பதால், தங்களுக்குள் ஹிந்தியில் பேசுகின்றனர். இந்த அடிப்படையில் பார்த்தால், இரு மொழி கொள்கை உள்ள தமிழகத்தில் தானாகவே மும்மொழி பயன்பாடு உருவாகிறது. மேலும், ஆங்கிலம், ஹிந்தியுடன் தமிழ் என்ற மூன்றாவது மொழியும் கூடுதலாக கற்று, தங்கள் மாநிலத்தில் மட்டுமின்றி, தமிழகத்திலும் அந்த மாணவர்களுக்கு உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பெற முடிகிறது.கூடுதல் மொழி அறிவு
ஆனால், தமிழக மாணவர்களுக்கு ஹிந்தி கற்றுத் தராததால், அவர்களால் பிற மாநிலத்தவருடன் பழகவோ, வேலை மற்றும் உயர் கல்வி வாய்ப்புகளை பெறவோ முடிவதில்லை. எனவே, ஹிந்தி பேசும் மாநில குழந்தைகளுக்கு தமிழ் கற்றுத் தருவது போல், தமிழக மாணவர்களுக்கு தேசிய அளவில் அதிகமாக பேசப்படும் ஹிந்தி கற்று தரப்பட வேண்டும். இதனால், தமிழக மாணவர்களுக்கும், கூடுதல் மொழி அறிவு கிடைக்கும். தமிழகத்தில் வாழும் வட மாநிலத்தவருக்கு மும்மொழி கல்வி; தமிழையே தாய்மொழியாக கொண்டவர்களுக்கு இரு மொழி கல்வி என்ற நிலையை மாற்ற வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us