UPDATED : ஜூலை 14, 2023 12:00 AM
ADDED : ஜூலை 14, 2023 08:52 AM
தொண்டாமுத்துார்:
கோவையில் உள்ள அரசுப் பள்ளியில், அமைச்சர் திடீர் ஆய்வு செய்தார்.கோவைக்கு நேற்று முன் தினம் வந்த, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ், தொண்டாமுத்துார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு செய்தார். தலைமையாசிரியர் பிரேமா அமைச்சரை வரவேற்றார். பிளஸ் 1 வணிகவியல் வகுப்புக்குச் சென்று, ஆசிரியர் பாடம் கற்பிக்கும் முறையையும், மாணவர்கள் கற்கும் முறையையும் பார்வையிட்டார். கழிப்பறை, சத்துணவுக் கூடம் மற்றும் விளையாட்டு மைதானம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.மாணவர்கள் வருகை மற்றும் பள்ளியின் தேவைகள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். அமைச்சர் கூறுகையில், எந்த மாவட்டத்திற்கு சென்றாலும், அங்குள்ள அரசுப் பள்ளிகளில் திடீர் ஆய்வு நடத்துவது வழக்கம். தொண்டாமுத்துார் பள்ளியை சிறப்பாக பராமரிக்கின்றனர், என்றார்.
