தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அறிவியல் விழிப்புணர்வு திறனறி தேர்வு அறிவிப்பு

அறிவியல் விழிப்புணர்வு திறனறி தேர்வு அறிவிப்பு

அறிவியல் விழிப்புணர்வு திறனறி தேர்வு அறிவிப்பு


UPDATED : ஜூலை 15, 2023 12:00 AM

ADDED : ஜூலை 15, 2023 10:22 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 15, 2023 12:00 AM ADDED : ஜூலை 15, 2023 10:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
தேசிய அறிவியல் அருங்காட்சியகங்கள், விஞ்ஞான் பாரதி மற்றும் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் (என்.சி.இ.ஆர்.டி.,) இணைந்து, பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் விழிப்புணர்வு திறனறி தேர்வை ஆண்டுதோறும் நடத்துகிறது. பள்ளி வாயிலாகவும், தனிநபராகவும் மாணவர்கள் தேர்வை எதிர்கொள்ளலாம். ஆங்கிலம் மட்டுமல்லாமல், தமிழ் உட்பட பிராந்திய மொழிகளிலும் கேள்விகள் இடம்பெறும். ஆன்லைன் வாயிலாக நடத்தப்படும் தேர்வில், ஆறு முதல் பிளஸ் 1 வரையிலான மாணவர்கள் பங்கேற்கலாம். இதற்கு, www.vvm.org.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க, செப். 15ம் தேதி கடைசி நாளாகும். மாணவர்களுக்கான தேர்வு அக்டோபர் 29, 30ம் தேதிகளில் நடத்தப்படுகிறது.பள்ளி, மாவட்ட அளவில் வெற்றி பெறுவோருக்கு, சான்றிதழுடன், அந்தந்த மாவட்டத்தில் உள்ளஆராய்ச்சி நிலையங்களுக்கு அழைத்து செல்லப்படுவர். மாநில அளவில் வெற்றி பெறுவோருக்கு, ரொக்கப்பரிசும், தேசியளவில் வெற்றி பெறுவோருக்கு மாதம் 2,000ம் வீதம் ஓராண்டுக்கு கல்வி உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. மேலும், தேசியளவில் உள்ள ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு அழைத்து செல்வதோடு, அங்குள்ள விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது. கூடுதல் தகவல்களுக்கு: vvmtamilnadu@gmail.com.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us