UPDATED : ஜூலை 15, 2023 12:00 AM
ADDED : ஜூலை 15, 2023 10:24 AM
அ நிறம் | அளவு
கோத்தகிரி:
கோத்தகிரி கூக்கல்தொறை அரசு உயர்நிலை பள்ளிக்கு கோவையை சேர்ந்த மகளிர் மன்றம் 1.50 லட்சம் ரூபாய் செலவில் உதவி பொருட்கள் வழங்கியது.நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) ஆனந்த் தலைமை வைத்தார். கோவையை சேர்ந்த ரக் ஷா மகளிர் மன்றம் செயலாளர் அர்ச்சனா விக்னேஷ் பிரபு தலைமையில், 12 பேர் கொண்ட மகளிர் குழுவினர், 1.50 லட்சம் ரூபாய் மதிப்பில் மாணவர்களுக்கு குடை, மழை கோட்டு, தண்ணீர் தொட்டி மற்றும் பல்வேறு தளவாட பொருட்கள் வழங்கினர். நிகழ்ச்சியில், பள்ளி பி.டி.ஏ., தலைவர் டட்லி, நிர்வாகி மணி, ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆலன், கவுன்சிலர் காமராஜ், வார்டு உறுப்பினர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ரவிக்குமார் நன்றி கூறினார்.
