தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வகுப்பு எடுக்க நேரமில்லை; புலம்பும் ஆசிரியர்கள்

வகுப்பு எடுக்க நேரமில்லை; புலம்பும் ஆசிரியர்கள்

வகுப்பு எடுக்க நேரமில்லை; புலம்பும் ஆசிரியர்கள்


UPDATED : ஜூலை 15, 2023 12:00 AM

ADDED : ஜூலை 15, 2023 10:26 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 15, 2023 12:00 AM ADDED : ஜூலை 15, 2023 10:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
பள்ளி துவங்கி ஒரு மாதம் ஆன நிலையிலும், வகுப்பு கையாள்வதை விட, புள்ளிவிபரங்களை திரட்டுதல், பதிவேற்றுதல் பணிக்கே கூடுதல் நேரம் செலவிட வேண்டியிருப்பதாக ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.பள்ளிக்கல்வித்துறையில், புதிய திட்டங்கள், அறிவிப்புகள், மாணவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்க, பள்ளிக்கல்வி மேலாண்மை முறைமை (எமிஸ்) இணையதளத்தில் இருந்து, புள்ளிவிபரங்கள் திரட்டுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் இதை பதிவேற்றினாலும், ஒருங்கிணைத்து பெறுவதில் உள்ள தொழில்நுட்ப குளறுபடிகளால், மாணவர்களின் விபரங்கள், அவ்வப்போது புதிதாகவே பெறப்படுகிறது. இதை இணையதளத்தில் பதிவேற்றுவதற்குள் ஆசிரியர்கள் படாதபாடுபடுகின்றனர்.குறிப்பாக, தொடக்க கல்வித்துறையில் இருந்து பள்ளிகளுக்கு, அலுவலக பணிகளுக்கென ஒரு கம்ப்யூட்டர் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. நெட்வொர்க் பிரச்னையால், ஆன்லைனில் தகவல்கள் பதிவேற்றினாலும், உள்ளீடு செய்வதில் சிக்கல்கள் நீடிக்கின்றன. இதனால், கற்பித்தல் பணிகள் வெகுவாக பாதிக்கப்படுவதாக, பலரும் குமுறுகின்றனர்.இடைநிலை ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:
எண்ணும் எழுத்தும் சிலபஸில், மாணவர்களுக்கான செயல்வழி விளக்கம் அதிகமாக உள்ளது. இதை புரியும்படி விளக்கினால் தான், அடிப்படை கற்றலை வலுப்படுத்த முடியும். ஆனால், கல்வித்துறையில் இருந்து, நாள்தோறும் ஒரு உத்தரவு பிறப்பித்து, புள்ளிவிபரங்களை இணையதளத்தில் பதிவேற்றுமாறு தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக, தினசரி மாணவர் சேர்க்கை விபரம், மாணவர்களின் உடல்நிலை குறித்த தகவல்கள், நலத்திட்ட பொருட்களின் நிலை, பழைய மாணவர்களை ஒருங்கிணைத்தல், இடைநிற்றல் தழுவியோர் விபரம், பள்ளி மேலாண்மை குழு பணிகள், காலை, மதிய உணவு சாப்பிட்டோர் விபரம், நுாலக புத்தகங்களின் இருப்பு பட்டியல் உள்ளிட்டவற்றை பதிவேற்றி வருகிறோம். இப்பணிகளுக்கு பிரத்யேக அலுவலர்களை நியமிக்காமல், ஆசிரியர்களே மேற்கொள்வதால், அதிக பணிச்சுமை நீடிக்கிறது. இச்சிக்கலுக்கு தீர்வு காணாவிடில், அடிப்படை கல்வியே ஆட்டம் காணும் நிலை ஏற்படலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us