UPDATED : ஜூலை 18, 2023 12:00 AM
ADDED : ஜூலை 18, 2023 11:14 AM
அ நிறம் | அளவு
கோவை:
பாரதியார் பல்கலையின் உயிரிதொழில்நுட்பவியல் மற்றும் நுாலக தகவல் அறிவியல் துறைகளில் தற்காலிக அடிப்படையில், கவுரவ விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.நுாலக தகவல் அறிவியல் துறை சார்பில், கவுரவ விரிவுரையாளர் தேர்வு நேரடி நேர்காணல் வாயிலாக வரும், 21ம் தேதி சம்பந்தப்பட்ட துறையில் நடைபெறும். தொகுப்பூதிய அடிப்படையில் பணியில் இருக்கும் வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.உயிரிதொழில்நுட்பத்துறை ஆர்வமுள்ளவர்கள் விபரங்களை, n.jeyakumar@buc.edu.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மின்னஞ்சல் வழியாக தகவல் தெரிவிக்கப்படும். மேலும், பல்வேறு தகவல்களை பல்கலை இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
