UPDATED : ஜூலை 18, 2023 12:00 AM
ADDED : ஜூலை 18, 2023 11:25 AM
அ நிறம் | அளவு
சென்னை:
அனிமேஷன், விஷூவல் எபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ் துறைக்காக புதிய தனி கொள்கையை தயாரிக்கும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.இது குறித்து, தகவல் தொழில்நுட்பவியல் துறை செயலர் குமரகுருபரன் சமூக வலைதளத்தில் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அனிமேஷன், விஷூவல் எபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ் துறை தொடர்பாக, புதிய கொள்கை தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த துறைகள் சார்ந்த நிறுவனங்களுக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது. இதற்கான சிறப்பு மையம் உருவாக்கும் பணிகளும் நடந்து வருகின்றன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
