தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/யூ.டி.சி., பணியிடங்கள் குறைப்பு இளைஞர்கள் அதிர்ச்சி

யூ.டி.சி., பணியிடங்கள் குறைப்பு இளைஞர்கள் அதிர்ச்சி

யூ.டி.சி., பணியிடங்கள் குறைப்பு இளைஞர்கள் அதிர்ச்சி


UPDATED : ஜூலை 21, 2023 12:00 AM

ADDED : ஜூலை 21, 2023 10:12 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 21, 2023 12:00 AM ADDED : ஜூலை 21, 2023 10:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
யூ.டி.சி.,பணியிடங்களை குறைத்திருப்பது இளைஞர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.புதுச்சேரி அரசு துறைகளில் காலியாக உள்ள யூ.டி.சி., இடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதனையொட்டி கடந்த செப்டம்பர் மாதம் 116 யூ.டி.சி., பணியிடங்கள் நிரப்பப்படும் என்று நிர்வாக சீர்த்திருத்த துறை அறிவித்தது. அதன் பிறகு கடந்த 4ம் தேதி கூடுதலாக, 146 யூ.டி.சி.,இடங்களும் நிரப்பப்படும் என அறிவித்தது. கூடுதலாக நிரப்பப்பட உள்ள 146 யூ.டி.சி., பணியிடங்களும் பொது-59; எம்.பி.சி.,-26; எஸ்.சி.,-23; ஓ.பி.சி.,-16; இ.டபுள்யூ.எஸ்.,-14; மீனவர்-3; முஸ்லீம்-3; பி.டி.,-1; எஸ்.டி.,-1 என்ற இட ஒதுக்கீட்டு அடிப்படையில் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது.மேலும் முன்னாள் ராணுவ வீரர் - 14; மாற்று திறனாளிகள் - 5; விளையாட்டு வீரர் - 7; என்று உள் ஒதுக்கீட்டு இடங்கள் உண்டு என தெரிவிக்கப்பட்டது. இது, யூ.டி.சி., தேர்விற்கு தயாராகி வந்த இளைஞர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், நிர்வாக சீர்திருத்த துறை 116 இடங்களுக்கு மட்டுமே போட்டி தேர்வு என புது குண்டை போட்டுள்ளது. இது இளைஞர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிகரிக்கப்பட்ட 146 இடங்களில், கடந்த 2022 - 23ம் கல்வியாண்டில் முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்க வாய்ப்பு கேட்டு மத்திய தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதனால், வேறு வழியின்றி நிர்வாக சீர்திருத்த துறை யூ-டர்ன் போட்டு 116 யூ.டி.சி.,பணியிடங்களுக்கு மட்டும் போட்டி தேர்வு நடக்கும் என அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us