UPDATED : ஜூலை 23, 2023 12:00 AM
ADDED : ஜூலை 23, 2023 11:04 AM
சென்னை:
பல்கலைகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும் எண்ணத்தை மாணவர்கள் நலன் கருதி தி.மு.க. அரசு கைவிட வேண்டும் என தமிழக பா.ஜ. துணை தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:
ஒரே மாதிரியான பாடத்திட்டம் என்பது சமச்சீர் கல்வித் திட்டத்தை கல்லுாரிகளில் புகுத்தும் பிற்போக்குத்தனமான திட்டம். தேசிய தர மதிப்பீட்டு குழு விதிமுறைகளின்படி மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது குறைந்தபட்சம் 30 சதவீத பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு கல்வி நிறுவனமும் தனித்தனியேதான் மதிப்பிடப்பட முடியும்.பல்கலைகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும் எண்ணத்தை உள் நோக்கத்தை மலிவான அரசியலை மாணவர்கள் நலன் கருதி தி.மு.க. அரசு கைவிட வேண்டும். இல்லையேல் கல்வித்தரம் குறைந்து மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
