தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வேளாண் பட்டதாரிகள் தொழில் துவங்க மானியம்

வேளாண் பட்டதாரிகள் தொழில் துவங்க மானியம்

வேளாண் பட்டதாரிகள் தொழில் துவங்க மானியம்


UPDATED : ஜூலை 24, 2023 12:00 AM

ADDED : ஜூலை 24, 2023 05:23 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 24, 2023 12:00 AM ADDED : ஜூலை 24, 2023 05:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டத்தில் தொழில் முனைவோராக்கும் திட்டத்தில், வேளாண் பட்டதாரிகள் தொழில் துவங்க ஒரு லட்சம் மானியம் வழங்கப்படும் என வேளாண்மை துறை தெரிவித்துள்ளது.வேளாண் பட்டப்படிப்பு முடித்தவர்களைக் கொண்டு வளர்ந்து வரும் தொழில்நுட்ப அறிவை வேளாண்மையில் ஈடுபடுத்தி, வேளாண்மையை வளர்ச்சி அடையச் செய்யும் நோக்கில், இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்கும் திட்டம், செயல்பாட்டில் உள்ளது. இதில், வேளாண்மை உட்கட்டமைப்பு நிதி திட்டத்தில் அளிக்கப்படும் நிதியுதவி பெற்று, வங்கிக் கடனுடன் வேளாண் சார்ந்த தொழிலை புதிதாக துவங்க, முன்வரும் வேளாண் பட்டதாரிகளுக்கு சிறப்பு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டில் வேளாண்மை, தோட்டக் கலை, வேளாண்மை பொறியியல் ஆகிய துறைகளில் பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள், வேளாண் சார்ந்த தொழில் துவங்க 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது. இதற்காக இந்த ஆண்டு தமிழக அரசு 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.இத்திட்டம் குறித்து விழுப்புரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் கணேசன் கூறியதாவது:
இந்த திட்டத்தில் சேர 21 முதல் 40 வயதுடைய வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் பிரிவில் குறைந்தபட்சம் இளநிலையில் பட்டப்படிப்பு முடித்தவராகவும், அரசு மற்றும் தனியார் நிறுவனத்தில் பணிபுரியாதவராகவும் இருக்க வேண்டும். இதற்கு வேளாண் சார்ந்த தொழில்களை அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தினை செயல்படுத்தும் கிராம ஊராட்சிகளில் தொழில் துவங்க வேண்டும். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 சான்றிதழ், பட்டப்படிப்புக்கான சான்றிதழ், ஆதார், ரேஷன் கார்டு, துவங்க உத்தேசித்துள்ள வேளாண் சார்ந்த விரிவான திட்ட அறிக்கை, வங்கி கணக்கு புத்தகம், வங்கியிடம் பெற்ற கடன் ஒப்புதல் ஆவணம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.விருப்பமுள்ள வேளாண் பட்டதாரிகள் அக்ரீஸ் நெட் வலைதளத்தில் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்ய வேண்டும். தகுதியான பயனாளிகள், வங்கிக் கடன் பெற்று தொழில் துவங்கியவுடன், அதற்கான மானிய தொகை இரண்டு தவணையாக பயனாளிகளுக்கு வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். மேலும், விபரங்களுக்கு மாவட்ட தொழில் மையம், வேளாண் விற்பனை மற் றும் வேளாண் வணிகத்துறை, வேளாண்மை துறை அலுவலகங்களை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு கணேசன் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us