தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கிருஷ்ணகிரியில் நாய் கண்காட்சி

கிருஷ்ணகிரியில் நாய் கண்காட்சி

கிருஷ்ணகிரியில் நாய் கண்காட்சி


UPDATED : ஜூலை 24, 2023 12:00 AM

ADDED : ஜூலை 24, 2023 05:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 24, 2023 12:00 AM ADDED : ஜூலை 24, 2023 05:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், 29வது அகில இந்திய மாங்கனி கண்காட்சியில், நேற்று நாய்கள் கண்காட்சி நடந்தது.இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஜெர்மன் செப்பர்ட், பெல்ஜியம் மெலோ, அக்கிடா, சிப்பிப்பாறை, லேபர் டாக், பொமேரியன், பக், டால்மேசன், அமெரிக்க புல்லி, கிரேடன், சைபேரியன் அஷ்கி உள்பட, 37 வகையான, 170 நாய்கள் பங்கேற்றன. கண்காட்சியில், நாய்களின் குணம், கீழ்ப்படிதல், தடுப்பூசி விபரம், ஆரோக்கியத்தை ஆய்வு செய்து, அதில் சிறந்த நாய்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.இதில், நாமக்கல் கால்நடைத்துறை பேராசிரியரும் துறைத்தலைவருமான இசக்கியேல் நெப்போலியன் நடுவராக பங்கேற்றார். கண்காட்சியில், ஒவ்வொரு வகையான நாய்களுக்கும், பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்பட்டு, அதில் சிறந்த நாய்களின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.முன்னதாக அனைத்து நாய்களுக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டன.கண்காட்சியில், கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் ராஜேந்திரன், துணை இயக்குனர் மரியசுந்தர், உதவி இயக்குனர் டாக்டர் அருள்ராஜ், ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சுவாமிநாதன் உட்பட பொதுமக்கள் மற்றும் நாய் பிரியர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us