தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குன்னுாரில் துரியன் பழம் சீசன் துவக்கம்

குன்னுாரில் துரியன் பழம் சீசன் துவக்கம்

குன்னுாரில் துரியன் பழம் சீசன் துவக்கம்


UPDATED : ஜூலை 25, 2023 12:00 AM

ADDED : ஜூலை 25, 2023 06:21 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 25, 2023 12:00 AM ADDED : ஜூலை 25, 2023 06:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குன்னுார்:
குன்னுாரில் துரியன் பழம் சீசன் துவங்கியது.நீலகிரி மாவட்டம் குன்னுார் பர்லியார் மற்றும் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கல்லாறு அரசு தோட்டகலை பண்ணையில் மருத்துவ குணம் நிறைந்த துரியன் மங்குஸ்தான் பழங்கள் விளைகின்றன. இங்கு 2020 ஜூனில் துரியன் சீசன் துவங்கிய நிலையில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக சீசன் தாமதமாகி வருகிறது. இந்நிலையில் குற்றாலம் மற்றும் கல்லாறு பண்ணையில் விளைந்த துரியன் பழங்கள் தற்போது பர்லியார் வடுக தோட்டம் உட்பட குன்னுாரில் உள்ள பழ கடைகளுக்கு விற்பனைக்கு வந்துள்ளன. வெளி மார்க்கெட்டில் கிலோ 550 முதல் 600 ரூபாய் வரை விற்கப்படுகிறது.நீலகிரி மாவட்ட தோட்டக்கலை இணை இயக்குனர் சிபிலா மேரி கூறுகையில் பர்லியார் அரசு தோட்டக்கலை பண்ணையில் 50 துரியன் மரங்கள் உள்ளன. அதில் 33 மரங்களில் சிறியதாக துரியன் காய்த்துள்ளது. ஒரு வாரத்தில் இங்கு சீசன் துவங்கும். கல்லாறில் 3 மரங்களில் துரியன் விளைந்துள்ளது. கிலோ 520 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தாது சத்துக்கள் அதிகம் உள்ளன. இந்த பழம் உட்கொண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பலரும் வாங்கி செல்கின்றனர் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us