UPDATED : ஜூலை 25, 2023 12:00 AM
ADDED : ஜூலை 25, 2023 06:42 AM
சைனிக் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் எண்ணிக்கை குறித்து பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய்பட் வெளியிட்டார்.ஜூலை 18ம் தேதி நிலவரப்படி முந்தைய முறையின் கீழ் நிறுவப்பட்ட 33 சைனிக் பள்ளிகளில் பயிலும் மொத்த மாணவிகளின் எண்ணிக்கை 1,299 ஆகும். கூட்டாண்மை முறையில் தொடங்கப்பட்ட 19 சைனிக் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் எண்ணிக்கை 303 ஆகும். மேலும் முந்தைய முறையின் கீழ் நாட்டில் உள்ள 33 சைனிக் பள்ளிகளும் இணைக் கல்வியாகும். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்/ தனியார்/ மாநில அரசு பள்ளிகளுடன் கூட்டு முறையில் புதிய சைனிக் பள்ளிகளைப் பொறுத்தவரை, மாணவர்கள்/ பெண்கள்/இணை கல்வி அடிப்படையில் பிரத்யேகமாக அமைக்கப்படும் பள்ளி குறித்து எந்த நிபந்தனையும் இல்லை என பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய்பட் மாநிலங்களவையில் அனில் சுக்தியோரவ் போண்டேவுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.
