தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/திண்டுக்கல் வந்த சயின்ஸ் எக்ஸ்பிரஸ் ரயில்

திண்டுக்கல் வந்த சயின்ஸ் எக்ஸ்பிரஸ் ரயில்

திண்டுக்கல் வந்த சயின்ஸ் எக்ஸ்பிரஸ் ரயில்


UPDATED : ஜன 10, 2010 12:00 AM

ADDED : ஜன 10, 2010 10:20 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 10, 2010 12:00 AM ADDED : ஜன 10, 2010 10:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை சார்பில், சயின்ஸ் எக்ஸ்பிரஸ் ரயில் கடந்தாண்டு அக்., 2 முதல் இயக்கப்பட்டு வருகிறது.வரும் ஏப்., 26 வரை, முக்கியமான 56 ரயில்வே ஸ்டேஷன்களில்,மாணவர்கள், பொதுமக்கள் பார்வையிடும் வகையில், குறிப்பிட்ட நாட்களில் இந்த ரயில் நிறுத்தப்படுகிறது. 208 நாட்களில், 18 ஆயிரம் கி.மீ., தூரம் பயணிக்க உள்ள இந்த ரயிலில்,அனைத்து பெட்டிகளும் ஏ.சி., வசதி செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பெட்டியிலும், அறிவியல் துறையின் வளர்ச்சி, நானோ தொழில்நுட்பம், உடல் பாதுகாப்பில் புரதம் உள்ளிட்ட சத்துகளின் அவசியம், குரோமோசோம், ரத்த அணுக்கள், மூளையின் வளர்நிலை, உடல் உறுப்புகளின் அமைப்பு மற்றும் செயல்படும் விதம், பருவகாலங்கள், புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட மாற்றங்கள் போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

சாதாரண கம்ப்யூட்டரை விட 500 மடங்கு அதிக செயல்திறன் கொண்ட சூப்பர் கம்ப்யூட்டர் செயல்முறை, உலகில் அழிந்து வரும் மொழிகள்,எரிமலை ஆகியவை வீடியோ காட்சிகளுடன் விளக்கப்படுகின்றன. இவற்றில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, பூமி உட்பட 10 கோள்களில், மனிதனின் எடையை தெரிந்து கொள்ளும் மிஷின் வைக்கப்பட்டுள்ளது.

இதை பயன்படுத்தும் நபரின் எடை, ஒவ்வொரு கிரகத்திலும் எவ்வளவு இருக்கும் என்பது தெரிவிக்கப்படுகிறது. அதிகபட்ச எடை சூரியனிலும், குறைந்தபட்ச எடை சந்திரனிலும் காட்டப்படுகிறது.திண்டுக்கல்(ஜன. 9ல்) ஸ்டேஷனுக்கு நேற்று வந்த இந்த ரயில், முதலாவது பிளாட்பாரத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த ரயிலை பார்க்க, பிளாட்பார டிக்கெட் தேவை இல்லை.

அடுத்ததாக இந்த ரயில் சேலத்தில்(ஜன.13 முதல்15) வரை நிற்கும். பின், ஆந்திராவில் உள்ள கடப்பா ஸ்டேஷனுக்கு(ஜன. 16ல்) செல்கிறது. ரயிலில் இருப்பவை குறித்து ஆங்கில மொழியில் மட்டுமே விளக்கங்கள் அளிக்கப்படுகிறது. சாதாரண மக்கள் மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு ஏற்ப, அந்தந்த மாநில மொழிகளில் விளக்கம் அளிக்காததால், கிராமப்புற மாணவர்கள் பலர் ஏமாற்றத்துடன் சென்றனர். இதன் பயனை பெற விரும்புவோர்,ஆங்கில மொழி தெரிந்த ஆசிரியர்களுடன் செல்வது சிறந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us