தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆஸி செல்லும் மாணவர் எண்ணிக்கை குறையும்!

ஆஸி செல்லும் மாணவர் எண்ணிக்கை குறையும்!

ஆஸி செல்லும் மாணவர் எண்ணிக்கை குறையும்!


UPDATED : ஜன 10, 2010 12:00 AM

ADDED : ஜன 10, 2010 11:07 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 10, 2010 12:00 AM ADDED : ஜன 10, 2010 11:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அமெரிக்காவை ஒப்பிடுகையில், ஆஸ்திரேலியாவில் கல்வி கட்டணம் குறைவு என்பதால், ஏராளமான இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் படிக்க செல் கின்றனர்.70 ஆயிரத்துக்கும் அதிகமான இந்திய மாணவர்கள் மெல் போர்ன் மற்றும் சிட்னி நகரில் உள்ள கல்லூரிகளில் படிக்கின் றனர்.இவர்களில், பலர் படித்து கொண்டே பகுதி நேர வேலை செய்கின்றனர்.

இரவில் பணி முடிந்து வீடு திரும்பும் இந்திய மாணவர்கள் பலர் கடந்த ஆண்டு அதிக அளவில் தாக்கப்பட்டுள் ளனர்.கிட்டத்தட்ட நூறு மாணவர் கள், வன்முறை கும்பலால் தாக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய இந்திய மாணவர் சங்கத் தலைவர் கவுதம் குப்தா தெரிவித்துள்ளார்.கடந்த வாரம் நிதின் கார் என்ற பஞ்சாப் மாநில இளைஞர், தான் வேலை செய்யும் ஓட்டலுக்கு செல்லும் வழியில் குத்திக் கொல்லப்பட்டார். இதற்கு இந்திய அரசும், ஆஸ்திரேலிய துணை பிரதமரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

வழக்கமாக இந்திய மாணவர் களை தாக்கி அவர்களிடமிருந்த பணம் மற்றும் கொள்ளையடித்து சென்ற கும்பல், தற்போது கொலை செய்யும் அளவுக்கு துணிந்து விட்டதை கண்டு இந்திய இளைஞர்கள் பலர் பீதியில் உறைந்துள்ளனர்.அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு படிக்க செல்வதற்காக விசாவுக்கு விண்ணப்பித்துள்ள இளைஞர்கள் பலரும் இந்த சம்பவத்தால் அங்கு படிக்க செல் வதை கைவிட முடிவு செய்துள்ளனர்.இதனால், இந்திய மாணவர் கள் ஆஸ்திரேலியாவுக்கு செல்வது 20 முதல் 50 சதவீதம் வரை குறையும், என ஆஸ்திரேலிய கல்விக் குழு பிரதிநிதி நீல் படேல் தெரிவித்துள்ளார்.

கவர்ச்சி விளம்பரங்கள் மூலம் இந்திய மாணவர்களை கவர்ந் திழுத்த 10க்கும் அதிகமான கல்லூரிகள், கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் இழுத்து மூடப்பட்டன.விவசாய நிலங்களை விற்று அந்த நாட்டுக்கு படிக்க சென்ற ஏழை மாணவர்கள் பலரும் இதனால், நடுத்தெருவில் நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். ஆஸ்திரேலியாவுக்கு படிக்க செல்கிறோம் என்ற போர்வையில் ஏழை மாணவர்கள் பலர் அங்கு பகுதி நேர வேலைக்கு செல்கின்றனர்.

இதனால், தான் வன்முறையாளர்களின் தாக்குதலுக்கு ஆளாகின்றனர்,எனவே, ஆஸ்திரேலியாவுக்கு படிக்க வருபவர்கள் தங்கள் கையிருப்பில் எட்டு லட்ச ரூபாய் வைத்திருக்க வேண்டும், என அந்நாட்டு அரசு நிபந்தனை விதித்துள்ளது.இதற்கு முன்பு மாணவர்கள் தங்கள் கையிருப்பில் ஐந்து லட்ச ரூபாய் வைத்திருக்க வேண்டும், என்ற நிபந்தனை இருந்தது.

தொடர் தாக்குதல், போலி கல்லூரிகள் மூடல், கையிருப்பு தொகை அதிகரிப்பு போன்ற விஷயங்களால் ஆஸ்திரேலியாவுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும், என்பதில் சந்தேகமில்லை.இரும்பு, நிலக்கரி ஏற்றுமதிக்கு அடுத்த படியாக ஆஸ்திரேலியாவுக்கு அதிக அன்னிய செலாவணி கல்வி துறை மூலம் கிடைத்து வந்தது.மாணவர்களின் வரத்து குறையும் என்பதால், தற்போது அன்னிய செலாவணி தொகை குறைந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us