எம்.பி.பி.எஸ்., கலந்தாய்வு; ஜிப்மரில் இன்று துவக்கம்
எம்.பி.பி.எஸ்., கலந்தாய்வு; ஜிப்மரில் இன்று துவக்கம்
UPDATED : ஜூலை 31, 2023 12:00 AM
ADDED : ஜூலை 31, 2023 03:18 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி:
ஜிப்மர் எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று (31ம் தேதி) துவங்கி 4ம் தேதி வரை நடக்கிறது.2023-24ம் கல்வியாண்டுஎம்.பி.பி.எஸ்.,சேர்க்கைக்கானமுதல் சுற்று கலந்தாய்வு மூலம்சீட் ஒதுக்கீடு பட்டியலை மத்திய மருத்துவ கலந்தாய்வு கமிட்டி வெளியிட்டது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில்243 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. இதில் புதுச்சேரி ஒதுக்கீடாக 64 இடங்கள் வழங்கப்படுகிறது. இந்த இடங்களுக்கு நீட் தேர்வு மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.இதற்கான கலந்தாய்வு ஜிப்மரில் இன்று (31ம் தேதி) துவங்கி வரும் 4ம் தேதி வரை நடக்கிறது.
