தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பழைய பாடத்திட்டத்தை மறக்காத உயர்கல்வி மன்றம்

பழைய பாடத்திட்டத்தை மறக்காத உயர்கல்வி மன்றம்

பழைய பாடத்திட்டத்தை மறக்காத உயர்கல்வி மன்றம்


UPDATED : ஆக 04, 2023 12:00 AM

ADDED : ஆக 04, 2023 10:43 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 04, 2023 12:00 AM ADDED : ஆக 04, 2023 10:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உயர்கல்வி மன்றம் தயாரித்துள்ள பாடத்திட்டத்தை பின்பற்ற, அனைத்து கல்லுாரிகளுக்கும் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த பாடத்திட்டத்துக்கு, பெரும்பாலான கல்லுாரி களின் கல்விக் குழுக்கள் மற்றும் சிண்டிகேட் குழுக்களில், ஒப்புதல் பெறப்படவில்லை. அதனால், புதிய பாடத்திட்ட விபரம், பல்கலைகளில் இருந்து கல்லுாரிகளுக்கு கிடைக்கவில்லை. அதற்கு பதிலாக, உயர்கல்வி மன்றத்தின் இணையத்தில் இருந்து, பாடத்திட்ட விபரங்களை எடுத்து கொள்ளலாம் என, அறிவுறுத்தப்பட்டது. ஆனால், உயர்கல்வி மன்றத்தின் இணையத்தை பார்த்த கல்லுாரி பேராசிரியர்கள், அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த இணைய சேவையில், தகவல்கள் புதுப்பிக்கப்படாமல், பழைய பாடத்திட்ட விபரங்களே இடம்பெற்றுள்ளன.இதுகுறித்து, கல்லுாரி பேராசிரியர்கள் சிலர் கூறியதாவது:
உயர்கல்வி மன்றத்தின் இணையம், 10 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட நிலையில், அதில் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே உள்ளது. அரசு பல்கலைகள், கல்லுாரிகள் குறித்த தகவல்களோ, அரசின் உயர் கல்வித் துறை குறித்த தகவல்களோ இடம் பெறவில்லை. அதேபோன்று, உயர்கல்வி மன்ற இணையத்தில், கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் உருவாக்கப்பட்ட பாடத்திட்டங்கள் தான் இன்னும் உள்ளன. புதிய பாடத்திட்டத்தை, அனைத்து கல்லுாரிகளும் பின்பற்ற அழுத்தம் தரும் நிலையில், அதை தயாரித்த உயர்கல்வி மன்றத்தையாவது, முதலில் இணையத்தில் வெளியிட உத்தரவிட்டிருக்கலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us