எம்.ஐ.எஸ்., அனலிஸ்ட் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
எம்.ஐ.எஸ்., அனலிஸ்ட் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
UPDATED : ஆக 09, 2023 12:00 AM
ADDED : ஆக 09, 2023 04:32 PM
கள்ளக்குறிச்சி:
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் மேலாண்மை தகவல் அமைப்பு ஆய்வாளர் எனும் எம்.ஐ.எஸ்,. அனலிஸ்ட் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.கலெக்டர் ஷ்ரவன்குமார் செய்திக்குறிப்பு:
கள்ளக்குறிச்சி மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் வெளி ஒப்பந்த அடிப்படையில் எம்.ஐ.எஸ்,. அனலிஸ்ட் பணியிடம் ஒன்றிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடத்திற்கு கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், கணினி பயன்பாடு பிரிவில் பி.இ., பி.டெக்., அல்லது எம்.எஸ்சி., ஆகியன கல்வித்தகுதிகளாகும். 30 வயதுக்கு கீழ் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் எம்.ஐ.எஸ்., டூல்ஸ், டேட்டா அனலிசிஸ், வெப் அப்ளிகேஷன், மொபைல் ஆப் தொடர்புடைய பணிகளில் அனுபவம், ஓபன் சோர்ஸ் சாப்ட்வேர், டூல்ஸ்-அப்ளிகேஷன், டேட்டா பேஸ் டெவலப்மென்ட்-மெயின்டனன்ஸ், டேட்டா அனலட்டிகல் டூல்ஸ் ஆகியவற்றில் முன் அனுபவம், எக்செல் மற்றும் பிரசன்டேஷன் திறமையும் பெற்றிருக்க வேண்டும்.விண்ணப்பங்கள் வெள்ளைத்தாளில் தட்டச்சு செய்தோ அல்லது கையெழுத்து பிரதியாகவோ இணை இயக்குனர், திட்ட இயக்குனர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடம், நிறைமதி (கிராமம்), நீலமங்கலம் (அஞ்சல்), கள்ளக்குறிச்சி மாவட்டம்- 606 213 என்ற முகவரிக்கு வரும் 14ம் தேதி மாலை 5:00 மணிக்குள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
